tamilnadu

img

சிகிச்சையில் இருந்த யானை உயிரிழப்பு

சிகிச்சையில் இருந்த யானை உயிரிழப்பு

கோவை, மே 20- கோவை மருதமலை வனப்பகு தியில் உடல் நலக்குறைவுடன் கடந்த 4 நாட்களாக தொடர் சிகிச்சை யில் இருந்த பெண் காட்டு யானை  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. கோவை பாரதியார் பல்கலை கழகம் பின்புறம், மருதமலை வனப் பகுதியில் கடந்த மே.16 ஆம் தேதி யன்று உடல் நலம் பாதிக்கப்பட்ட  பெண் யானையை வனத்துறையி னர் கண்டறிந்தனர். இதையடுத்து கால்நடை மருத்துவர் குழுவினர் மற்றும் வனத்துறையினர் இணைந்து காட்டு யானைக்கு இரவு, பகலாக சிகிச்சை அளிக்கும் பணியை துவங்கினர். முதல் கட்ட மாக காட்டு யானையை கிரேன்  உதவியுடன் நிற்க வைத்து அதற்கு  குளுக்கோஸ் மற்றும் நோய் எதிர்ப்பு மருந்துகளை செலுத்தி  வந்தனர். தொடர்ந்து அளிக்கப் பட்ட சிகிச்சை காரணமாக காட்டு யானையின் உடல்நிலையில் முன் னேற்றம் ஏற்பட்டது. இந்நிலையில்  நான்காவது நாளான செவ்வா யன்று ஐந்து கால்நடை மருத்து வர்கள் அடங்கிய குழுவினர் சிகிச்சை அளித்து வந்த நிலையில், வனப்பகுதியில் தற்காலிக குட்டை அமைக்கப்பட்டது. பின்னர் உடல்  நலம் பாதிக்கப்பட்ட பெண் காட்டு  யானை குட்டைக்குள் இறக்கப் பட்டு “ஹைட்ரோ தெரபி”  சிகிச்சை  வழங்கப்பட்டது. இந்நிலையில் திடி ரென யானையை மயங்கியதால் கிரேன் மூலம் யானையை மீண்டும் வெளியே எடுக்கப்பட்டது. அப் போது உடல் நிலையில் திடீரென மோசமான நிலையில், யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இது குறித்து கால்நடை மருத்து வர் அலுவலர் சுகுமார் கூறுகை யில், கடந்த நான்கு நாட்களாக மருத் துவர் குழுவினர் தொடர்ந்து யானைக்கு சிகிச்சை அளித்து வந் தோம். குறிப்பாக யானைக்கு கல்லீ ரல் பிரச்சனை மற்றும் தொண்டை யில் ஏற்பட்டுள்ள தொற்று காரண மாக உணவு எடுத்துக் கொள்ள முடி யாத சூழலில் இருந்தது. முதல் கட்ட  சிகிச்சைக்காக காட்டு யானையின்  காதில் உள்ள நரம்பு மூலம் நோய்  எதிர்ப்பு மருந்துகள் செலுத்தப்பட் டது. சுமார் 100 பாட்டில் குளுக் கோஸ் செலுத்தப்பட்டது. நீர் சத்து  குறைபாடு இருந்ததால் சுமார் 80  லிட்டர் தண்ணீர் யானையின் ஆசன வாய் மூலம் செலுத்தப்பட்டது. தொடர் சிகிச்சையால் யானை யின் உடல் நிலையில் முன்னேற் றம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்காலிக குட்டை ஏற் படுத்தப்பட்டு அதில் சுமார் 18,000  லிட்டர் தண்ணீர் ஊற்றப்பட்டது. பின்னர் உடல் நலம் பாதிக்கப்பட்ட காட்டு யானைக்கு “ஹைட்ரோ தெரபி” சிகிச்சை வழங்கப்பட்டது. இதில் உடல்நலம் முன்னேறி வந்த நிலையில், திடீரென ஏற் பட்ட மாரடைப்பால் யானை உயிரி ழந்துள்ளது. யானைக்கு உடற்கூறு  ஆய்வு மேற்கொண்டு அதன் பாகங் கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பிறகு என்னென்ன பிரச்சனைகள் இருந்தது என்பது குறித்து தெரிய வரும் என தெரிவித்தார். இது குறித்து பேசிய வன உயி ரின ஆர்வலர் சிராஜ் கூறும்போது, சிகிச்சை பலனின்றி யானை உயிரி ழந்தது மிகுந்த வேதனை அளிக்கி றது. இப்பகுதியில் உள்ள ஊராட் சிக்கு சொந்தமான குப்பை கிடங் கில் யானைகள் பிளாஸ்டிக் உள் ளிட்ட கழிவுகளை உண்பது ஒரு கார ணமாக இருந்து வருகிறது. அதனை  அகற்ற வேண்டும் என பலமுறை கோரிக்கை வைத்திருந்தோம். ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை, இதனால் காட்டு யானை தற்போது உயிரிழந்துள்ளது. எனவே உடனடியாக மருதமலை வான எல்லையில் உள்ள குப்பை கிடங்கை அகற்ற வேண்டும் என தெரிவித்தார்.