tamilnadu

img

இரட்டை கொலை வழக்கில் குற்றவாளிகள் கைது

இரட்டை கொலை வழக்கில் குற்றவாளிகள் கைது

தனிப்படையினருக்கு முதல்வர் பாராட்டு

ஈரோடு, மே 20 - சிவகிரியில் நடந்த இரட்டை  கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள் ளனர். தமிழகத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்திய இந்த சம் பவத்தில் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளைப் பிடித்த காவல் துறையினருக்கு தமிழக முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார். ஈரோடு மாவட்டம், சிவகிரி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட உச்சிமேடு - மேகரையான் தோட் டம் என்ற இடத்தில் வசித்து வந்த  ராமசாமி (72) மற்றும் அவரது  மனைவி பாக்கியம் (63) ஆகி யோர் கொலை செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து 10 3/4 சவ ரன் நகைகள் கொள்ளையடிக்கப் பட்டதாக கடந்த 1-ஆம் தேதி வழக்கு  பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரிக்க 12  சிறப்புக் குழுக்கள் அமைக்கப் பட்டு விசாரணை மேற்கொள்ளப் பட்டன. இதில், கடந்த 17-ஆம் தேதி யன்று அரச்சலூர், வீரப்பம்பாளை யத்தைச் சேர்ந்த ஆச்சியப்பன் (48), அரச்சலூர் தெற்கு வீதியைச்  சேர்ந்த மாதேஸ்வரன் (52), வீரப் பம்பாளையம், புதுக்காலனியைச் சேர்ந்த ரமேஷ் (54) ஆகியோர் சந் தேகத்தின் பேரில் கைது செய் யப்பட்டனர். விசாரணையில் கொலைகளை செய்து நகைகளை யும், செல்போனையும் கொள்ளை யடித்ததை ஒப்புக்கொண்டனர். அவர்களிடம் இருந்து கொள்ளை யடிக்கப்பட்ட நகைகள், செல் போன், மூன்று இருசக்கர வாகனங் கள், இரண்டு மர கைப்பிடிகள் மற் றும் கையுறை ஆகியவை கைப் பற்றப்பட்டன. இதுகுறித்து ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவ லகத்தில் மேற்கு மண்டல காவல் துறை தலைவர் செந்தில்குமார் திங்களன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர்  கூறுகையில், “இச்சம்பவம் குறித்து  விசாரிக்க 12 தனிப்படைகள் அமைத்து, பழைய குற்றவாளிகள்  மற்றும் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்தி னோம். கால் தடங்கள் அடிப்படை யில் கொலை குற்றவாளிகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தோம். கொலை நடப்பதற்கு 15 நாட்களுக்கு முன்பு  நோட்டமிட்டது தெரியவந்தது. கொலையாளிகள் மூவரும்  கொள்ளையடித்த நகைகளை  சென்னிமலைபாளையத்தைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவரி டம் உருக்கி கொடுத்தனர். அவரி டமிருந்து 82 கிராம் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு, அவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.” மேலும், கடந்த 28.11.2024 அன்று திருப்பூர் மாவட்டம், அவி நாசிபாளையம், சேமலைக்கவுண் டம்பாளையத்தில் தெய்வசிகா மணி (78), அவரது மனைவி அல மாத்தாள் (74) மற்றும் அவர்களது மகன் செந்தில்குமார் (44) ஆகி யோரைக் கொலை செய்து 5 1/2  பவுன் நகை மற்றும் செல்போனை கொள்ளையடித்தது உள்ளிட்ட குற் றங்களை தாங்கள் செய்ததாக இந்த  மூன்று பேரும் ஒப்புக்கொண்ட னர். தற்போது இந்த வழக்கு சிபிசிஐடியிடம் உள்ளது. மேலும்,  இவர்களிடம் நடத்திய விசாரணை யில் பல வழக்குகளில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. அது குறித்த ஆதாரங்களை திரட்டி வரு கிறோம். விசாரணை முடிவில் முழு மையான தகவல்கள் வெளிவரும் என்றார். இந்த செய்தியாளர் சந் திப்பின் போது கோவை சரக  டி.ஐ.ஜி சசிமோகன், ஈரோடு  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜாதா, ஏடிஎஸ்பி விவேகானந் தன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.  முதலமைச்சர் பாராட்டு இந்நிலையில், ஈரோடு மற்றும்  திருப்பூர் மாவட்டங்களில் நடந்த  கொலை, கொள்ளை சம்பவங்க ளில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடித்து, கொள் ளையடிக்கப்பட்ட பொருட்களை மீட்ட காவல் துறை அலுவலர்களை  செவ்வாயன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்து, பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.