தொழிலாளர் விரோத சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
கோவை, மே 20- தொழிலாளர் விரோத சட்டங்களை திரும்பப்பெற்று, சட்ட பாதுகாப்பு வழங்க வேண்டும், என வலியுறுத்தி செவ்வா யன்று அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொழிலாளர்களை கொத்தடிமை யாக்கும் நான்கு தொழிலாளர் சட்ட தொகுப்புகளை திரும்பப்பெற வேண் டும். அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியமாக ரூ.26 ஆயிரம் வழங்க வேண்டும். கான்ட்ராக்ட், கேஷு வல், தினக்கூலி முறையை முற்றாக ஒழிக்க வேண்டும். அங்கன்வாடி, ஆஷா உள்ளிட்ட திட்டப்பணியாளர் களை காலமுறை ஊதியத்திற்குள் கொண்டு வர வேண்டும். உள்ளாட்சி, பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள், டேங்க் ஆப்ரேட்டர் கள் ஆகியோருக்கு காலமுறை ஊதி யம் வழங்கி பணி நிரந்தரம் செய்ய வேண்டும். சாலை போக்குவரத்து மாசோதாவை ரத்து செய்ய வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்சன் திட்டத்தை அமல் படுத்த வேண்டும், உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 9 ஆம் தேதியன்று அகில இந்திய பொது வேலை நிறுத்தம் நடைபெறவுள்ளது. இந்நிலையில், அனைத்து தொழிற்சங் கங்கள் சார்பில் செவ்வாயன்று கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவை பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, ஏஐடியுசி சி.தங்கவேலு தலைமை வகித் தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, ஏஐடியுசி மாநி லப் பொருளாளர் எம்.ஆறுமுகம், எச்எம்எஸ் மாநிலச் செயலாளர் டி.எஸ்.ராஜாமணி, எல்பிஎப் பி.துரை, ஐஎன்டியுசி பி.சண்முகம், எம்எல்எப் தலைவர் ஷாஜகான், ஏஐசிசிடியு க.பாலசுப்பிரமணியன், எல்டியுசி ஜெய பிரகாஷ் நாராயணன் உள்ளிட்ட திரளா னோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண் டனர். தருமபுரி தருமபுரி பிஎஸ்என்எல் அலுவல கம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு, சிஐடியு மாவட்டச் செயலாளர் பி. ஜீவா தலைமை வகித்தார். எல்பிஎப் மாவட்டத் தலைவர் மணி, மாவட்டச் செயலாளர் சண்முக ராஜா, ஏஐசிசி டியு மாவட்டச் செயலாளர் சி.முருகன், ஐஎன்டியுசி மாவட்டத் தலைவர் சிவ லிங்கம், ஏஐடியுசி மாவட்ட நிர்வாகி மனோகரன், சிஐடியு நிர்வாகிகள் வெங் கட்ராமன், பெருமாள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோன்று, பாலக்கோட்டில் சிஐடியு மாநிலச் செயலாளர் சி.நாகராசன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாநி லக்குழு உறுப்பினர் சி.கலாவதி உள் ளிட்டோர் பங்கேற்றனர். அரூரில் எல்பிஎப் தலைவர் ஜே.பி.பழனி, சிஐடியு மாவட்ட நிர்வாகி சி.ரகுபதி, பென்னாகரத்தில் ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் கே.மணி, சிஐடியு மாவட்ட நிர்வாகி எஸ்.சண்முகம் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. இதில் திரளானோர் பங்கேற்றனர். நாமக்கல் நாமக்கல் பிஎஸ்என்எல் அலுவல கம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு, சிஐடியு மாவட்ட துணைத்தலை வர் வரதராஜன் தலைமை வகித்தார். இதில் சிஐடியு மாவட்டச் செயலாளர் என்.வேலுச்சாமி, துணைச்செயலாளர் சிவராஜ், ஏஐடியுசி மாநிலச் செயலாளர் முருகராஜ், எம்எல்எப் மாநிலச் செய லாளர் என்.எஸ்.ரங்கசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோன்று, திருச்செங்கோடு அண்ணா சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஏஐடியுசி மாவட்டத் தலைவர் ஜெயரா மன், சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் செங்கோடன் ஆகியோர் தலைமை வகித் தனர். இதில் மூத்த தோழர்கள் ஏ.ஆதி நாராயணன், ஐ.ராயப்பன் உட்பட பலர் பங்கேற்றனர். இதேபோன்று மாவட்டத் தின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில், சிஐடியு மாவட்டத் தலைவர் எம்.அசோகன், உதவிச்செய லாளர் கே.மோகன் மற்றும் அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். பிஎஸ்என்எல் பிஎஸ்என்எல் ஊழியர்கள், ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் இணைந்து, கோவை டெலிகாம் அலு வலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பிஎஸ்என்எல் டாட் ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.குடியரசு தலைமை வகித்தார். பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாநிலச் செயலாளர் எஸ். மகேஸ்வரன் கோரிக்கைகளை விளக்கி சிறப்புரையாற்றினார். ஓய்வூதி யர் சங்க அகில இந்திய அமைப்பு செய லாளர் வி.வெங்கட்ராமன், பிஎஸ் என்எல் ஒப்பந்த ஊழியர் சங்க மாவட் டச் செயலாளர் ஏ.ஒய்.அப்துல் முத்த லிப் ஆகியோர் வாழ்த்தி பேசினர். ஏ.எஸ் சாகின் அகமது நன்றி கூறினார். ஈரோடு ஈரோடு மாவட்டம், எஸ்கேசி சாலை யில் அனைத்து தொழிற்சங்க கூட்ட மைப்பின் சார்பில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு எச்எம்எஸ் மாவட்டத் தலைவர் பி.சண்முகம் தலைமை வகித் தார். சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ். சுப்ரமணியன், செயலாளர் எச்.ஸ்ரீராம், ஏஐடியுசி சின்னசாமி, ஐஎன்டியுசி துரை சாமி, எல்பிஎப் கோபால், ஏஐசிசிடியு கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.