tamilnadu

img

மாற்றுப்பாலினத்தவருக்கான மருத்துவ சேவை மையம் திறப்பு

மாற்றுப்பாலினத்தவருக்கான மருத்துவ சேவை மையம் திறப்பு

நாமக்கல், மே 20- நாமக்கல் அரசு மருத்துவமனை யில், மாற்றுப்பாலினத்தவருக்கான பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவ சேவை மையத்தினை மாவட்ட ஆட்சி யர் ச.உமா திறந்து வைத்தார். நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், ரூ.15 லட்சம் மதிப் பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மாற் றுப்பாலினத்தவருக்கான பன்னோக்கு  உயர் சிறப்பு மருத்துவ சேவை மையத் தினை மாவட்ட ஆட்சியர் ச.உமா தெரி வித்து வைத்தார். மருத்துவமனையின் ஏழாவது தளத்தில் இம்மையத்தின் வெளிநோயாளிகள் பிரிவு பிரதி வாரம்  செவ்வாய் கிழமை காலை 8 மணி முதல் 12 மணி வரை செயல்படும். இப்பிரிவில் மன நல சிகிச்சை மருத்துவர், பொது மருத்துவர், மகப்பேறு மருத்துவர், காது  மூக்கு தொண்டை மருத்துவர், தோல்  சிகிச்சை மருத்துவர் உள்ளடக்கிய மருத்துவர்களைக் கொண்டு மருத்துவ சேவைகள் வழங்கப்படவுள்ளது. இம் மையத்தில் பால்வினை நோய்கள் மற் றும் தொற்றா நோய்களை கண்டறிதல்  மற்றும் சிகிச்சை, அனைத்து வித பொது  அறுவை சிகிச்சைகள், பொது மருத்துவ  சேவைகள், தோல் நோய்களுக்கான சிகிச்சைகள், மனநல ஆலோசனை மற் றும் சிகிச்சைகள் உள்ளிட்ட பல்வேறு  சேவைகள் வழங்கப்படும், என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இந்நிகழ் வில் அரசு மருத்துவக்கல்லூரி முதல் வர் சாந்தா அருள்மொழி, மாவட்ட சமூக  நல அலுவலர் தி.காயத்திரி ஆகி யோர் கலந்து கொண்டனர்.