tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

சிறுத்தைகள் உலா: மக்கள் அச்சம்

உதகை, மே 20- உதகை அருகே உள்ள அணிக்கொரை மற்றும் கொல்லி மலை கிராமத்தில் இரண்டு சிறுத்தைகள் உணவு தேடி இரவு நேரத்தில் குடியிருப்புக்குள் உலா வருவதால் கிராம மக்கள் அச்சமடைந்து உள்ளனர். நீலகிரி மாவட்டம், 55 சதவீதம் வனப்பகுதியை கொண்ட மாவட்டமாகும். இந்த வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டுமாடு உள்ளிட்ட பல்வேறு வனவிலங்கு களின் வாழ்விடமாக திகழ்ந்து வருகிறது. இந்நிலையில் சமீப காலமாக உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதி களுக்குள் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இவ்வாறு வரும் சிறுத்தைகள் வளர்ப்பு நாய், ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வேட்டையாடிச் செல்வது வாடிக் கையாகி வருகிறது. இந்நிலையில் உதகை அருகே உள்ள  அணிக்கொரை கிராமத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் உணவு தேடி இரவு நேரங்களில் சிறுத்தை உலா வருகிறது. அதேபோல் கொல்லிமலை கிராமத்தில் 2 சிறுத்தைகள் குடி யிருப்பின் நுழைவு வாயிலில் நடமாடும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளதால் அக்கிராம மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக சுற்றி திரியும் சிறுத்தைகளை வனத்துறையினர் கண்காணித்து அடர்ந்த  வனப்பகுதிக்குள் விட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கால்வாயை தூர்வாராததால் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்

நாமக்கல், மே 20- பள்ளிபாளையத்தில் பலத்த மழை பெய்த நிலையில், சாக் கடை கால்வாயை தூர்வாராத தால், மழைநீருடன் கழிவுநீரும் வீடுகளுக்குள் புகுந்ததால்  பொதுமக்கள் அவதிக்குள்ளா கினர். நாமக்கல் மாவட்டம், பள்ளி பாளையம் பகுதியில் திங்களன்று மாலை பலத்த மழை  பெய்தது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்த நிலையில், குமாரபாளையம் சாலை, அக்ரஹாரம், பாரதியார் தெருவில் அமைந்துள்ள தாழ்வான பகுதிகளில் உள்ள 10க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீருடன் கழிவுநீர் புகுந் தது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். வீடுகளி லிருந்த சமையல் பாத்திரங்கள், காய்கறிகள், உடைகள் அனைத்தும் நீரில் மூழ்கியது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், எங்கள் பகுதியிலுள்ள குறுகிய அளவிலான சாக்கடை கால்வாயை தூர்வாருமாறு பலமுறை கூறியும், நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. சாக்கடை கால்வாய் முழுமையாக நிரம்பி, மழைநீர் வீடுகளுக்குள் புகுந்தது. மழைநீர் வடிவதற்கு நேரமாகும் என்பதால், நாங் களே எங்கள் கையில் உள்ள பொருட்களைக் கொண்டு மழை நீரை வெளியேற்றினோம். கோடைக்காலம் முடிவுற்று மழைக் காலம் துவங்குவதால் உரிய பாதுகாப்பு முன்னேற்பாடுகளை  நகராட்சி நிர்வாகம் செய்து தர வேண்டும். தாழ்வான பகுதி களை கண்டறிந்து மழைநீர் தேங்காத வகையில் நடவ டிக்கை எடுக்க வேண்டும், என்றனர். இதனையடுத்து செவ்வா யன்று காலை சாக்கடை கால்வாயை தூர்வாரும் பணி நடை பெற்றது.

தொடரும் சிஐடியுவின் காத்திருப்புப் போராட்டம்

கோவை, மே 20- பேச்சுவார்த்தை தோல் வியடைந்ததை தொடர்ந்து கே.ஜி.டெனிம் தொழிற் சாலை முன்பு இரண்டாவது நாளாக சிஐடியுவினர் காத் திருப்புப் போராட்டத்தில் ஈடு பட்டு வருகின்றனர். மூன்று மாத கால சம்ப ளப் பாக்கியை வழங்கவும், நிறுத்தி வைக்கப் பட்டுள்ள இரண்டு வருட போனஸ் வழங்க வும், இஎஸ்ஐ, பிஎப் உடனடியாக செலுத்த வேண்டியும், உற்பத்தியை நிறுத்தியுள்ள தொழிற்சாலையை உடனடியாக இயக்க வேண்டியும் கோவை மாவட்டம், மேட்டுப் பாளையம் தாலுகா, ஜடையம் பாளையம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள கே.ஜி. டெனிம் தொழிலாளர்கள் சிஐடியு உடன் தொழிற்சாலை முன்பு திங்களன்று காத்தி ருப்புப் போராட்டம் தொடங்கியது. இதனைய டுத்து திங்களன்று மாலை ஆலை நிர்வா கம் மற்றும் தொழிலாளர்கள் தரப்பில் பேச்சு  வார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் தொழி லாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிர்வாகத் தரப்பில் ஏற்க மறுத்ததால் பேச்சு  வார்த்தை தோல்வியடைந்தது. இதனையடுத்து, செவ்வாயன்று இரண் டாவது நாளாக காத்திருப்புப் போராட்டம் தொடர்ந்தது. இதில், சிஐடியு மாவட்டச் செய லாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி பங்கேற்று தொழிலாளர்கள் மத்தியில் உரையாற்றி னார். இதில் சிஐடியு இன்ஜிரியரிங் சங்க பொருளாளர் ஏ.ஜி.சுப்பிரமணியம், மில் தொழிலாளர் சங்க துணைத்தலைவர் ராம கிருஷ்ணன், பொருளாளர் ஆனந்தன், சிபிஎம்  தாலுகா செயலாளர் கே.கனகராஜ், சங்க நிர் வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

காவிரி ஆற்றில் சாயக்கழிவுநீர் வெளியேற்றம்?மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு

நாமக்கல், மே 20- பள்ளிபாளையம் வழியாக பாயும் காவிரி ஆற்றில், சுத்திகரிப்பு செய்யா மல் சாயக்கழிவுநீர் வெளியேற்றப் படுவதாக செய்திகள் வெளியான நிலை யில், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி கள் ஆய்வு செய்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்தின் பள்ளிபா ளையம், குமாரபாளையம் பகுதிக ளில் ஏராளமான சாயப்பட்டறைகள் செயல்பட்டு வருகின்றன. விசைத்தறித் தொழில் பிரதானமாக இங்கு இருப்ப தால், ஜவுளி நூல்களில் சாயம் ஏற்றுவ தற்காக ஏராளமான சாய ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலை யில், அரசின் விதிகளை மீறி சாயப்பட்ட றையிலிருந்து, சுத்திகரிப்பு செய்யாமல் கழிவுநீரை அப்படியே, சாக்கடை கால் வாய் வழியே காவிரி ஆற்றில் கலக்கப் படுவதாக புகார் எழுந்துள்ளது. இந்நி லையில், ஞாயிறன்று பள்ளிபாளையம் -  குமாரபாளையம் சாலை, சில்லாங்காடு  என்ற பகுதியில் ஒரு சாய ஆலையி லிருந்து சுத்திகரிப்பு செய்யப்படாமல் பச்சை நிறத்தில் சாயக்கழிவுநீர் அப் படியே காவிரி ஆற்றில் கலக்கப்பட்டு வருவதாக இணையத்தில் வீடியோ ஒன்று வெளியானது. இதையடுத்து குமாரபாளையம் மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர் செந்தில்குமார் தலை மையிலான அதிகாரிகள் பள்ளிபாளை யம், கலியனூர், சில்லாங்காடு, ஆவத்தி பாளையம், அக்ரஹாரம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். வாய்க்கால் வழியே செல்லும் நீர் மாதி ரிகளை சேகரித்து, ஒரு சில சாய  ஆலைகளில் திடீர் ஆய்வு மேற்கொண் டனர். சாயக்கழிவு நீர் காவிரி ஆற்றில் கலக்கப்படுவதாக புகார்கள் வரும்போ தெல்லாம், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கண் துடைப்பிற்காக அவ் வப்போது ஆய்வு பணியை மேற்கொள் கின்றனர். பிறகு சிறிது நாட்களுக்குப் பிறகு வழக்கம் போல சாயக்கழிவுநீர் காவிரி ஆற்றில் எவ்வித பிரச்சனைக ளும் இன்றி கலந்து வருவதும், வாடிக் கையான ஒன்றாக இருக்கிறது என சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

மனைப்பட்டா கேட்டு ஆட்சியரிடம் மனு

தருமபுரி, மே 20- நீண்ட ஆண்டு காலமாக அரசு புறம்போக்கு நிலத்தில் வீடு  கட்டி குடியிருந்து வருபவர்களுக்கு மனைப்பட்டா வழங்கக் கோரி, தருமபுரி மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஷிடம் மனு அளிக் கப்பட்டது. தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், பைசுஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட சின்னமாட்லாம்பட்டி கிராமத்தில், கடந்த மூன்று தலைமுறைகளாக தருமபுரி - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையின் ஓரம் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் பொதுமக்கள் வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர். இந்த குடி யிருப்பின் மூலம் தான் குடும்ப அட்டை ஆதார் அட்டை, வாக் காளர் அடையாள அட்டை பெற்றுள்ளனர். வீட்டிற்கான மின்  இணைப்பும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், 30க்கும் மேற் பட்ட குடும்பத்தினருக்கு சொந்த வீட்டுமனை இல்லை. விவ சாய நிலம் இல்லை. எனவே, ஏழ்மையில் உள்ள குடும்பங் களின் நலன் கருதி, எங்கள் குடியிருப்புக்கு மனைப்பட்டா வழங்க வேண்டும், என வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் திங்களன்று ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

மாணவி தனிமைப்படுத்தப்பட்ட விவகாரம் பள்ளி தாளாளருக்கு நிபந்தனை ஜாமீன்

கோவை, மே 20- பருவம் எய்த மாணவியை தனிமைப் படுத்தப்பட்ட விவகாரத்தில் குற்றம் சாட்டப் பட்ட மூவரும் தினமும் நெகமம் காவல் நிலை யத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி நீதி மன்றம் உத்தரவிட்டது. கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அருகே செங்குட்டுப்பாளையம் கிராமத்தில் செயல்பட்டு வரும் சுவாமி சித்பவானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பூப்படைந்த 8 ஆம் வகுப்பு மாணவியை பருவம் எய்த  நிலையில் தீட்டு எனக் கருதி வாசற்படியில் அமர வைத்து தேர்வு எழுத வைத்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற் படுத்தியது. இந்நிலையில், வன்கொடுமை  தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்என சிறுமியின் பெற்றோர்கள்  நெகமம் காவல் நிலையத்தில் கொடுத்த  புகாரின் அடிப்படையில் பள்ளி தாளாளர்  தங்கவேல் பாண்டியன், முதல்வர் ஆனந்தி,  அலுவலக உதவியாளர் சாந்தி ஆகிய மூவர்  மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்  கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், சம்பந்தப்பட்ட மூவரும் ஜாமின் வழங்கக் கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிமன்றம் மாவட்ட நீதிமன் றத்தை அணுகி ஜாமீன் பெற்றுக்கொள்ள அறி வுறுத்தியது. இதனையடுத்து, திங்களன்று கோவை வன்கொடுமை வழக்குகளை விசா ரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் மூவரும் ஆஜ ராகினர். வயது மூப்பு காரணமாகவும், உடல்  நல பாதிப்பை கருத்தில் கொண்டு கைது நடவடிக்கையை கைவிட வேண்டும் என  மனுதாரர் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட் டது. இதனையடுத்து மறு உத்தரவு வரும் வரை தினமும் நெகமம் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற  நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து செவ்வா யன்று மூவரும் காவல் நிலையத்திற்கு கையெழுத்திட வந்தனர்.