tamilnadu

img

நூறுநாள் வேலை கேட்டு விதொச ஆர்ப்பாட்டம்

நூறுநாள் வேலை கேட்டு விதொச ஆர்ப்பாட்டம்

லை வழங்க வேண் டும், என வலியுறுத்தி விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் செவ்வா யன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். தருமபுரி மாவட்டம், பென்னாக ரம் வட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி  சட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 200 நாள்  வேலை, தினக்கூலி ரூ.600 வழங்க  வேண்டும். இத்திட்டத்தை பென்னாக ரம் பேரூராட்சிக்கும் விரிபடுத்த வேண்டும். நூறுநாள் வேலைசெய்த தொழிலாளர்களுக்கு சம்பளப் பாக் கியை உடனடியாக வழங்க வேண் டும். வேலை செய்யும் இடங்களில் நிழற்கூடம், குடிநீர், மருத்துவ வசதி  ஏற்படுத்தித்தர வேண்டும், உள்ளிட்ட  கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழி லாளர் சங்கத்தினர் செவ்வாயன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம், கடமடை கிராம நிர்வாக அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சங் கத்தின் மாவட்ட துணைச்செயலாளர் எம்.செல்வம் தலைமை வகித்தார். இதில் மாவட்டச் செயலாளர் எம்.முத்து, மாவட்டப் பொருளாளர் எம்.சிவா, பகுதி செயலாளர்கள் ஆர்.வெங்கடாச்சலம், சி.சின்னத்துரை உட்பட திரளானோர் கலந்து கொண் டனர். ஈரோடு வேலை இல்லா கால நிவாரணம்  கேட்டு கவுந்தப்பாடி ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயத் தொழிலாளர்கள் மனு அளித்தனர். ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி  ஊராட்சியில் மகாத்மா காந்தி  தேசிய ஊரக வேலை உறுதி சட்டப் படி வேலை வழங்க வேண்டும். வேலை செய்த நாட்களுக்கு சம்பளப் பாக்கியை உடனே தர வேண்டும் என  கடந்த மாதம் 22 ஆம் தேதியன்று  மனு கொடுக்கப்பட்டது. இதில் எந்த  முன்னேற்றமும் ஏற்படாத நிலையில்,  வேலை வேண்டும், ஊதியம் வேண் டும் என நினைவூட்டும் மனு கொடுக்கும் போராட்டம் செவ்வா யன்று நடைபெற்றது. போராட்டத் திற்கு எஸ்.ஜானகி தலைமை தாங் கினார். அகில இந்திய விவசாயத்  தொழிலாளர் சங்க மாவட்டத் தலை வர் ஆர்.விஜயராகவன், பவானி  தாலுகா செயலாளர் எஸ்.மாணிக்கம்  மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் மாவட்டத் தலைவர் பி.பி.பழனி சாமி ஆகியோர் கலந்து கொண்ட னர். 10 குக்கிராமங்களிலிருந்து நூற்றுக்கணக்கான விவசாய தொழி லாளர்கள் வேலை கேட்டு மனு கொடுத்தனர்.