tamilnadu

img

துவளாத தாமஸ்..!

துவளாத தாமஸ்..!

இந்தமுறை அமெரிக்க கால்பந்து லீக் களைகட்டி விட்டது. மெஸ்சியின் பங்கேற்பு மட்டுமல்ல, ஜெர்மனியின் தாமஸ் முல்லர் உள்ளிட்ட பல பிரபலங்கள் உள்ளே நுழைந்துவிட்டனர். இறுதிப்போட்டியில் மெஸ்சி-முல்லர் மோதலாக ஊடகங்கள் சித்தரித்தன. முல்லரும், மெஸ்சியை நான் வேட்டையாடுவேன் என்று நெருப்பை மேலும் மூட்டினார். ஆனால் மெஸ்சியின் அணி வெற்றி பெற்றது. தாமஸ் முல்லரின் சகாக்கள் தோல்வியால் துவண்டனர். இரண்டாவது இடத்திற்கான பதக்கத்தைக்கூட அணிந்து கொள்ளாமல் நின்றனர். ஆனால், தாமஸ் முல்லர் மட்டும் அதை அணிந்து கொண்டு சாம்பியன் அணியைப் பாராட்டிக் கொண்டிருந்தார். அடுத்த முறை பார்த்துக் கொள்கிறேன் என்றும் சொல்லியிருக்கிறார்.