பயங்கரவாதம் - ஆர்எஸ்எஸ்சை எதிர்த்துப் போராடுவோம்!
பத்தனம் திட்டா, ஏப். 24 - பயங்கரவாதத்தையும், மக்களை மத அடிப்படையில் பிளவுபடுத்தும் ஆர்எஸ்எஸ்-ஸையும் எதிர்த்து நாட்டு மக்கள் போராட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபி அழைப்பு விடுத்தார். பத்தனம் திட்டாவில் செய்தி யாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார். அப்போது, “ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதத் தாக்குதல் நடந்தபோது, மக்களின் மீட்பராக இருந்த ஒரு முஸ்லிம் இளை ஞரை பயங்கரவாதிகள் கொன்றனர். மதத்தின் பெயரால் இந்தத் தாக்குதல் நடக்கவில்லை. மதத்திற்கும் பயங்கர வாதத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தாக்குதல்களுக்கு எதிராக ஒன்றிய அரசு வலுவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தாக்கு தல்களை எதிர்கொள்வதில் நாடு ஒற்று மையாக நிற்க வேண்டும்” என்று எம்.ஏ. பேபி கேட்டுக் கொண்டார். “மதத்தைப் பயன்படுத்தி மக்களி டையே பிரிவினையை ஏற்படுத்தும் ஆர்.எஸ்.எஸ்-ஸை நாம் எதிர்க்க வேண்டும். அம்பேத்கரையும் சுவாமி விவேகானந்தரையும் உரிமை கொண்டாட ஆர்.எஸ்.எஸ். முயற்சிக் கிறது. ஆர்.எஸ்.எஸ்-ஸை தடைசெய்த சர்தார் படேலின் சிலையையும், பிரதமர் மோடி மூலமாக ஆர்.எஸ்.எஸ். அமைத்தது. இதன் மூலம் வரலாற்றைப் பொய்யாக்க அவர்கள் முயற்சிக்கின்றனர்,” என்றும் பேபி குற்றம் சாட்டினார். “கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவல கத் திறப்பு விழா ஒரு கொண்டாட்டம் அல்ல; என்றும், புதிய ஏ.கே.ஜி. மையத்தில் நடைபெற்ற கூட்டத்தில் முதலில் நிறைவேற்றப்பட்டது, பயங்கரவாதத்திற்கு எதிரான தீர்மானம் தான்” எனக் குறிப்பிட்ட பேபி, “இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் பொதுச் செயலாளராக இருந்தபோது தில்லி ஏ.கே.ஜி. பவனுக்கு பி.டி.ரணதிவே அடிக்கல் நாட்டியதை நினைவு கூர்ந்தார். “பாஜகவுக்கு எதிராக மூன்றாவது அணி என்ற யோசனையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பரிசீலிக்கல்லை. மதச்சார்பற்ற கட்சிகளின் கூட்டான செயல்பாட்டையே விரும்புகிறோம்” என்று தெரிவித்த பேபி, “கேர ளத்தைப் பொறுத்தவரை, எதிர்க்கட்சி களின் தங்கக் கடத்தல், ஊழல் புகார்கள் பொய்யாகி விட்ட நிலையில், இடது ஜனநாயக முன்னணி மீண்டும் ஆட்சியை தொடரும் என்ற கவலையில் எதிர்க்கட்சிகளுக்கு உள்ளன; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை எந்த பதற்றமும் இல்லை” எனவும் எம்.ஏ. பேபி குறிப்பிட்டார்.