tamilnadu

img

தெலுங்கானா உள்ளாட்சித் தேர்தல் சிபிஎம் 13 இடங்களில் வெற்றி இடதுசாரிகள் வசமாகும் கொத்தகுடெம் மாநகராட்சி!

தெலுங்கானா உள்ளாட்சித் தேர்தல் சிபிஎம் 13 இடங்களில் வெற்றி  இடதுசாரிகள் வசமாகும் கொத்தகுடெம் மாநகராட்சி!

ஹைதராபாத் தெலுங்கானா மாநிலத் தில் உள்ள 116 நக ராட்சிகளுக்கும், 7 மாந கராட்சிகளுக்கும் பிப்., 11ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் மொத்தம் 73.01% வாக்குகள் பதிவாகின. பதிவான வாக்குகள் வெள்ளியன்று எண்ணப்பட்டன. வெள்ளியன்று நள்ளிரவில் அறிவிக்கப்பட்ட வாக்கு எண்ணிக்கை முடிவில் மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 13 இடங்க ளில்  வெற்றி பெற்றுள்ளது. ஹுசூர் நகர் நகராட்சியில் 6ஆவது வார்டு, கொத்தகுடெம் மாநகராட்சியில் ஒரு வார்டு உள்பட மொத்தம் 13 வார்டுகளில் சிபிஎம் வேட்பா ளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற 13 வேட்பாளர்களில் 5 பேர் பெண்கள் ஆவர். குறிப் பாக நல்கொண்டா, கம்மம், கொத்தகுடெம் ஆகிய மாவட்டங்க ளில் உள்ள பல்வேறு நகராட்சி களில் இடதுசாரி கட்சிகளின் செல்வாக்கு அதிகரித்துள்ளது.  கொத்தகுடெத்தில் இடதுசாரிகள்  60 வார்டுகளைக் கொண்ட கொத்தகுடெம் மாநகராட்சியில் சிபிஐ 29 வார்டுகளிலும், காங்கி ரஸ் 22 வார்டுகளிலும், பிஆர்எஸ் 8 வார்டுகளிலும், சிபிஎம் 1 வார்டி லும் வெற்றி பெற்றுள்ளன. எந்த கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை இல்லாத சூழ்நிலையில், தேர்தலு க்கு பிந்தைய கூட்டணி அமைத்து மாநகராட்சியை கைப்பற்ற இடது சாரிகள் - காங்கிரஸ் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வரு வதாக செய்திகள் வெளியாகி யுள்ளன. அதே சமயம் எதிர்க்கட்சி யான பிஆர்எஸ் இடதுசாரிகளுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்ப தாகவும் அறிவித்துள்ளது. வார்டு வாரியாக... மொத்தம் 116 நகராட்சிகளில் 79 நகராட்சிகளையும், 7 மாந கராட்சிகளில் 4 மாநகராட்சிக ளையும் ஆளும் காங்கிரஸ் கட்சி கைப்பற்றி உள்ளது. பாஜக ஒரு மாநகராட்சியை வென்றுள்ளது. 2 மாநகராட்சிகளில் யாரும் பெரும்பான்மை இல்லாத சூழல் உள்ளது. அதே போல பிஆர்எஸ் 25 நகராட்சிகளிலும், பாஜக 4 நக ராட்சிகளிலும் வெற்றி பெற்றுள் ளன. 8 நகராட்சிகளில் யாருக்கும்  பெரும்பான்மை கிடைக்கவில்லை. வார்டு வாரியாக மொத்தம் 2,836 வார்டுகளுக்கு தேர்தல் நடை பெற்றது. இதில் காங்கிரஸ் கட்சி 1,537 வார்டுகளிலும், பிஆர்எஸ் கட்சி 781 வார்டுகளிலும், பாஜக 336 வார்டுகளிலும், ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி 66 வார்டுக ளிலும், சிபிஐ 23 வார்டுகளிலும், பகுஜன் சமாஜ் கட்சி 2 வார்டு களிலும், சுயேச்சைகள் 263 வார்டு களிலும் வெற்றி பெற்றுள்ளன. பிஆர்எஸ் - பாஜகவிற்கு பலத்த சேதாரம் கடந்த 2020ஆம் ஆண்டு நடை பெற்ற உள்ளாட்சித் தேர்தலில் அப்போதைய ஆளுங்கட்சியான பிஆர்எஸ் 1,767 வார்டுகளில் வெற்றி பெற்று இருந்தது. ஆனால் தற்போதைய தேர்தலில் வெறும் 781 வார்டுகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.  கடந்த மக்களவைத் தேர்த லில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு இணையாக 8 தொகுதிகளையும், 35.19% வாக்குகளையும் பெற்ற பாஜக தற்போது படுதோல்வியைத் தழுவியுள்ளது. முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகரராவின் பிஆர்எஸ் கட்சியை பின்னுக்குத் தள்ளி, தெலுங்கானாவின் எதிர்க்கட்சியாகி விடுவோம் என்ற பாஜகவின் எண்ணத்தை அம் மாநில மக்கள் வேரோடு புடுங்கி எறிந்திருக்கிறார்கள். அதே போல பாஜகவின் மறைமுகக் கூட்டாளியான ஏஐஎம்ஐஎம் கட்சி கடந்த தேர்தலில் 93 வார்டுகளில் வென்று இருந்தது. ஆனால் தற்போது 66 வார்டுகளில் மட்டுமே வென்றுள்ளது. கடந்த தேர்தலில்  580 வார்டுகளில் வென்ற காங்கி ரஸ் இம்முறை 1,537 வார்டுகளில் வென்றுள்ளது என்பது குறிப்பி டத்தக்கது.