டாஸ்மாக் பணியாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் சம்பளம் உயர்வு
அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு
டாஸ்மாக் பணியாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் சம்பளம் உயர்வு வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி தெரிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் செவ்வாய்க் கிழமை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. பின்னர், பதிலளித்துப் பேசிய அமைச்சர் வி.செந்தில் பாலாஜி, “மக்கள் சுகாதாரம் மற்றும் சமூகப் பொருளாதாரத்தை பாதிக்கக் கூடிய கள்ளச் சாராயத்தின் பிடியிலிருந்து, பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களை பாதுகாப்பதே அரசின் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை கொள்கையின் முதன்மை நோக்கம்” என்றார்.
போதையில்லா மாநிலம்...
தமிழ்நாட்டில் கள்ளச்சாராய சாவுகளை தவிர்க்க தொடர்ச்சியான சோதனைகள் மற்றும் தீவிர கண்காணிப்புகள் மூலம் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி கடந்த 2024 ஆம் ஆண்டில் 123 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 80 குற்றவாளிகள் கைது செய்யப் பட்டுள்ளனர் என்றும் மெத்தனால் மற்றும் பிற கரைப்பான்களின் உற்பத்தி, போக்குவரத்துகள் குறித்தும் தொடர்ச்சியாக கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், போதை பொருட்கள் விற்பனை மற்றும் பயன்பாட்டுக்கு எதிராக தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. வரும் நாட்களில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டு தமிழ்நாட்டை போதைப்பொருட்கள் இல்லாத மாநிலமாக உருவாக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
வருவாய் அதிகரிப்பு
தமிழ்நாட்டில் அரசின் உத்தரவுப்படி, திருவள்ளுவர் தினம், குடியரசு தினம், வடலூர் இராமலிங்க அடிகளார் நினைவு நாள், மகாவீர் ஜெயந்தி, மே தினம், சுதந்திர தினம், நபிகள் நாயகம் பிறந்த நாள், காந்தி ஜெயந்தி ஆகிய 8 நாட்கள் - இவை தவிர, மாவட்ட ஆட்சி யரின் உள்ளூர் முக்கிய நிகழ்வுகள் என அறி விக்கப்படும் நாட்கள் மக்களவை மற்றும் சட்ட மன்ற, உள்ளாட்சித் தேர்தல், வாக்கு எண்ணிக்கை யின் போது மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. 2021-22 ஆம் ஆண்டில் ஆயத்தீர்வை வரு வாய் மற்றும் மதிப்புக்கூட்டு வரி ரூ.36 ஆயிரம் கோடியே 50 லட்சமாக இருந்தது. இது படிப்படி யாக உயர்ந்து இந்த ஆண்டில் மார்ச் வரை ரூ.48 ஆயிரம் கோடியே 344 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது என்றும் தெரிவித்தார்.
சம்பளம் உயர்வு
தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் 6,567 மேற்பார்வையாளர்கள், 14,636 விற்பனை யாளர்கள் மற்றும் 2,426 உதவி விற்பனை யாளர்கள் என மொத்தம் 23,629 மதுபான சில்லறை விற்பனைக் கடை பணியாளர்கள் தொகுப்பூதிய முறையில் பணியாற்றி வரு கிறார்கள். தற்போது வழங்கப்பட்டு வரும் தொகுப் பூதியம் மேற்பார்வையாளர்களுக்கு ரூ.2 ஆயிரம், விற்பனையாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் மற்றும் உதவி விற்பனையாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் என 1.4.2025 முதல் மாதந்தோறும் உயர்த்தி வழங்கப்படும். இதற்காக ஆண்டொ ன்றுக்கு ரூ.64.08 கோடி கூடுதல் செலவாகும் என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்தார்.