tamilnadu

img

திருக்கண்டீசுவரம் கோவில் கல்வெட்டில் தமிழ்நூல்

திருக்கண்டீசுவரம் கோவில் கல்வெட்டில் தமிழ்நூல்

தஞ்சாவூர், மே 22-  கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம்  நெல்லிக்குப்பம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள  திருக்கண்டீஸ்வர முடையார் கோவிலில், அப்பகுதி நகர்மன்ற உறுப்பினர் எஸ்.செல்வகுமார் அளித்த தகவலின்பேரில், சரசுவதி மகால் நூலகத் தமிழ்ப் பண்டிதரும், வரலாற்று ஆய்வாளருமான முனைவர் மணிமாறன், பொந்தியாகுளம் ஊ.ஒ. தொ.பள்ளி தலைமையாசிரியர், வர லாற்று ஆய்வாளர் முனைவர் கோ. தில்லை கோவிந்தராஜன் மற்றும் சக்கராப்பள்ளி ஊ.ஒ.ந.பள்ளி பட்டதாரி ஆசிரியர் கோ.ஜெயலெட்சுமி ஆகியோர் ஆய்வு செய்தனர்.  ஆய்வுக்குப் பின் வெளியான தகவலின் அடிப்படையில், கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் நெல்லிக் குப்பம் நகராட்சிக்குட்பட்ட திருக்கண்டீ ஸ்வரம் சிவாலயத்து கல்வெட்டில் ஒரு தமிழ் நூலின் பெயர் குறிப்பிடப்பெறுகின்றது.  அக்கல்வெட்டு வாசகம் ‘‘அடுகூற்று தைத்த தாளாடும் அடிகட்கு வடுகூர்ப்புரா ணம் வகுத்தான் புடவி நலம் கூர்ந்த புகழ் சோழகுலவல்லி வாழ்விற் ராசசேந் தன் தந்தை வாணாதிபன்” என்கின்றது கருவறை முன்மண்டபத்து தென்திசை யின் இடதுபுற அதிட்டானத்தில் உள்ள கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டில் கூற்றை உதைத் தாடும் அடிகளான சிவபெருமானுக்குப் புகழ் சேர்க்கும் வகையில் சோழகுல வல்லி நல்லூரைச் சார்ந்த வாணாதிபன் என்பவர் ‘திருவடுகூர்ப்புராணம்’ இயற்றியதாகக் குறிப்பிடுகின்றது.  குலோத்துங்க சோழன் காலத்தில் கங்கை கொண்ட சோழ வளநாட்டு பட்டாம்பாக்கை நாட்டு சோழகுலவல்லி நல்லூர் என்றும் விக்கிரமசோழனின் ஆறாம் ஆட்சியாண்டு கல்வெட்டி லிருந்து ராஜராஜ சோழ வளநாட்டு பட்டாம்பாக்கை நாட்டு சோழ குலவல்லி நல்லூர் என்றும் இவ்வூரின் பெயர் அமைந்துள்ளது. சோழர் ஆட்சிக்கு முன்னர் இவ்வூர் வடுகூர் என்றழைக்கப் பெற்றிருக்கக் கூடும்.  இவ்வூரைச் சார்ந்த வாணாதிபன் பிற்காலத்தில் படைத்த திருவடுகூர்ப் புரா ணம் என்னும் நூல் சுவடி வடிவிலும், அச்சு நூல் வடிவிலும் கூட இன்று கிடைக்கப்பெறவில்லை. இந்நூல் கிடைப் பின் கல்வெட்டில் திருக்கண்ணீஸ்வர முடையார் என்று சுட்டப்படும் இக்கோவி லின் வரலாற்றுச் செய்தியும் இவ்வூரின் வரலாற்றுச் செய்தியினையும் இன்னும் விரிவாகக் காண முடியும். ஒரு தமிழ் நூலின் தலைப்பே கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது வரலாற்றுக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும். இதே முக மண்டபத்தின் வடபுற அதிட்டானத்தில் தொடங்கி மேற்குப் பகுதி அதிட்டானம் வரை நான்கு வரிகள் கொண்ட நீண்ட கல்வெட்டுத் தொடர் வெட்டப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு விஜயநகர ஆட்சியாளர் கட்டாரி சாளுவ நரசிங்க தேவ மகாராஜன் காலத்தில் வெட்டப்பட்டுள்ளது. சிதைவு ற்றிருந்த இக்கோவில் மதில், மண்டபம் உள்ளிட்டவற்றைப் புதுப்பித்து திருப் பணி செய்தது பற்றி குறிப்பிடுவதோடு அத னை செம்பிலும் கல்லிலும் வெட்டிக்  கொள்ளக் கடவதாக என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.