நாட்டிலேயே மிக வேகமாக வளரும் மாநிலம் 3-ஆவது ஆண்டாக தமிழ்நாடு முதலிடம்!
புதுதில்லி, டிச.13- தமிழ்நாட்டின் மாநில மொத்த உள் நாட்டு உற்பத்தி (ஜிஎஸ்டிபி) 2023- 24-இல் ரூ.26.89 லட்சம் கோடியாக இருந்த நிலையில், 2024-25-ஆம் நிதி யாண்டில் ரூ. 31.18 லட்சம் கோடியாக உயா்ந்து 16 சதவிகித வளா்ச்சியைப் பதிவுசெய்துள்ளது. கடந்த 2021-22 மற்றும் 2024-25 இடையே தமிழ்நாட்டின் ஜிடிபி ரூ. 20.72 லட்சம் கோடியில் இருந்து ரூ. 31.18 லட்சம் கோடியாக உயா்ந்துள் ளது. 2021-22-இல் தமிழ்நாட்டின் தனி நபர் வருமானம் ரூ. 2.42 லட்சமாக இருந்த நிலையில் 2024-25-இல் ரூ. 3.62 லட்சமாக அதிகரித்துள்ளது. இந்தச் சாதனை குறி த்து முதலமைச் சர் மு.க. ஸ்டா லின், தமது ‘எக்ஸ்’ கருத் துப் பதிவிட்டுள் ளார். அதில், “பரப்பளவிலும் மக்கள் தொகை யிலும் பெரிய மாநிலமாக இல்லா விட்டாலும், ஒன்றிய அரசின் ஆதரவு பெருமளவில் இல்லாவிட்டாலும், மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில் 16 சதவிகிதத்துடன் ‘நம்பர் ஒன்’ என்ற இடத்தை தமிழ்நாடு பிடித்தி ருக்கிறது! 2021-2025 வரையிலான நிதியாண்டு களில் மட்டும் தமிழ்நாட்டின் பொருளா தாரம் 10.5 லட்சம் கோடி ரூபாய் அள வுக்கு உயர்ந்திருக்கிறது. இந்த வளர்ச்சி விகிதமானது வளர்ந்த பெரிய மாநி லங்களான, மகாராஷ்டிரா, கர்நாடகம், குஜராத் போன்றவற்றுடன் ஒப்பி டும்போது விஞ்சியதாக உள்ளது. தனி நபர் வருமான உயர்விலும் தமிழ்நாட் டின் வெற்றி தொடர்கிறது. 2031-ஆம் ஆண்டு, திராவிட மாடல் 2.0 நிறைவுறும்போது, இந்தியாவில் தமிழ்நாடு முதலிடத்தில் இல்லாத துறை யே இல்லை என்ற நிலை உருவாவது உறுதி!” என்று குறிப்பிட்டுள்ளார்.
