tamilnadu

மயோனைஸ் தயாரிக்க - விற்க  தமிழக அரசு ஓராண்டு தடை!

மயோனைஸ் தயாரிக்க - விற்க  தமிழக அரசு ஓராண்டு தடை!

சென்னை, ஏப். 24 - பச்சை முட்டையிலிருந்து செய்யப் படும் மயோனைஸை உற்பத்தி செய்வதற்கும், சேமித்து வைத்தல், விநியோகம் மற்றும் விற்பனை செய்வதற்கும், தமிழக அரசு ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. “உணவுப் பாதுகாப்புச் சட்டம் மற்றும் தர நிர்ணயச் சட்டம் 2006 பிரிவு 30(2) (a) படி, பொது சுகாதார நலன் கருதி ஏப்ரல் 8 முதல் ஓராண்டுக்கு தமிழ்நாடு முழுவதும், பச்சை முட்டையில் இருந்து தயாரிக்கப்படும் மயோனஸை உற்பத்தி, சேமிப்பு, விநியோகம் அல்லது விற்பனை செய்ய தடை விதிக்கப்படுகிறது” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முட்டையின் மஞ்சள் கரு, எலுமிச்சை சாறு, எண்ணெய், உப்பு போன்ற மூலப்பொருட்களைப் பயன் படுத்தி, தயாரிக்கப்படுவதே மயோ னைஸ் ஆகும். ஐஸ்கிரீம் போல இருக்கும் இந்த மயோனைஸை, துரித  உணவுகளான சாண்ட்விச், பர்கர், பீட்சா, ஷவர்மா ஆகியவற்றோடு சேர்த்து, உணவுப்பிரியர்கள் விரும்பி எடுத்துக் கொள்கின்றனர். மயோனைஸ் சமைக்கப்படாத பொருளாக இருப்பதால், உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் செழித்து வளரும். அத்துடன், மயோனைஸ் தயாரிப்பில் பச்சை முட்டைகளைப் பயன்படுத்துவதால் சால்மோனெல்லா போன்ற நோய்க் கிருமிகளால் மாசுபடும் அபாயம் அதிக மாக உள்ளது என்பதால் உணவு விஷ மாக மாறவும் வழிவகுக்கும் என்ற உணவியல் வல்லுநர்களின் எச்சரிக்கை அடிப்படையில், மயோனைஸ் தயாரிப்பு, விற்பனைக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டு உள்ளது.