tamilnadu

தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை 2026-27 முக்கிய சாதனைகள் ஒரு பார்வை

தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை 2026-27 முக்கிய சாதனைகள் ஒரு பார்வை

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்: மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் இத்திட்டத்தில் 1.31 கோடி பெண்கள் பயனடைகிறார்கள். கடந்த வெள்ளிக்கிழமை சிறப்புத் தொகையாக ரூ.5,000 ஒரே நேரத்தில் வரவு வைக்கப்பட்டது நாடே போற்றும் சாதனையாக அமைந்தது. * மகளிர் விடியல் பயணம்: ஒரு நபர் சராசரியாக மாதம் 881 பயணங்கள் மேற்கொள்கிறார்; மாதந்தோறும் சராசரி ரூ.888 சேமிப்பு கிடைக்கிறது. * மக்களைத் தேடி மருத்துவம்: 2.55 கோடி பேருக்கு முதல்முறை சேவை வழங்கப்பட்டுள்ளது; 4.75 கோடி பேருக்கு தொடர் சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. * டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டம்: 34,40,550 பெண்களுக்கு ரூ.4,042 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. * முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்: ரூ.6,374 கோடி காப்பீட்டுத் தொகையில் 87,34,363 கோரிக்கைகள் தீர்க்கப்பட்டுள்ளன. * நலம் காக்கும் ஸ்டாலின்: 1,206 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு 17,82,687 பேர் பயன்பெற்றுள்ளனர். * பாதுகாப்பான பிரசவம்: அரசு மருத்துவமனைகளில் மகப்பேறு இறப்பு விகிதம் ஒரு லட்சத்திற்கு 35 என்ற மிகக் குறைந்த அளவில் உள்ளது. பாதுகாப்பான பிரசவங்களில் தேசிய அளவில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது. * முதலமைச்சரின் சமூகப் பொருளாதார மேம்பாட்டுத் திட்டம் (CMARISE): ரூ.165 கோடி மானியம் விடுவிக்கப்பட்டு 8,639 பேர் பயன்பெற்றுள்ளனர். * கலைஞர் கைவினைத் திட்டம்: 23,879 விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு ரூ.405 கோடி கடன் உதவியும், ரூ.83 கோடி மானியமும் வழங்கப்பட்டுள்ளது. * உலகளாவிய சுற்றுலா மாநாடு: ரூ.22,794 கோடி முதலீட்டில் 127 முன்னணி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. * கோவில் திருப்பணிகள்: 5 ஆண்டுகளில் 4,180 திருக்கோவில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. 1,048 கோவில்களுக்குச் சொந்தமான ரூ.8,163 கோடி மதிப்பு நிலங்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. * உள்ளாட்சி அமைப்புகளில் புரட்சிகர சட்டம்: நாட்டிலேயே முதன் முறையாக உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகாரம் வழங்கும் வகையில் சட்டம் திருத்தப்பட்டுள்ளது. * தமிழ் மொழி பாதுகாப்பு: ஐக்கிய நாட்டு சபை அங்கீகரித்த மொழிகளில் திருக்குறளை மொழிபெயர்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன; பிறமொழி ஆதிக்கத்திலிருந்து தமிழைக் காக்க தமிழக அரசு முனைப்புடன் செயல்படுகிறது. * நாட்டிற்கே வழிகாட்டும் மாநிலம்: தமிழ்நாட்டின் நல திட்டங்களை பல மாநிலங்கள் பின்பற்றத் தொடங்கியுள்ளன; ஒன்றிய அரசின் மாற்றான் தாய் மனப்பான்மை இருந்த போதிலும் வளர்ச்சிப் பயணம் தொடர்கிறது.