லாரன்ஸிடமிருந்து காஞ்சனாவையும்
சூரியாவிடமிருந்து சிங்கத்தையும்
எடப்பாடியிடமிருந்து தமிழ்நாட்டையும்
மோடியிடமிருந்து இந்தியாவையும்
முதலில் காப்பாத்தனும்...!
- சுபாஷினி
**********
#சபாஸ் சேர நாட்டோரே
மோகன்லாலை கியூ-வில் நிற்க வைத்த மக்கள்...
பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது ‘மதுபான கடையில் கியூவில் நின்று மது வாங்குபவர்கள், நாட்டுக்காக கியூவில் சில மணி நேரம் நிற்க மாட்டார்களா” என கூவிய மோகன்லாலை, ஓட்டளிக்க வரிசையில் நிற்காமல் காவல்துறை உதவியுடன் நேரடியாக உள்ளே செல்ல முயன்ற போது, மக்கள் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது மோகன்லால் கூறியதை ஞாபகப்படுத்தி வரிசையில் நிற்க வைத்தனர்...
நடிகர் என்பதற்காக எந்த சிறப்பு அந்தஸ்தும் வழங்க முடியாது...!
தமிழா நீ இன்னும் பயணப்படனும்....நல்லதை கற்றுக்கொள்..சிறந்ததை எடுத்துக்கொள்...
தெளிந்த தேர்ந்த சிந்தனாவாதிகள்....கேரளம் முன் மாதிரி..!
- சார்லஸ் அந்தோணி ஸ்டீபன்
**********
அரசுகள் விவசாயத் தந்தையை நடு வீதியில் நிறுத்தினாலும்..
நாட்டை உலக அரங்கில் தலைநிமிரச் செய்திருக்கிறார் அந்த விவசாயி மகள்!
அரசுகள் விவசாயிகளுக்கு தூக்கு கயிற்றை பரிசளித்தாலும்..
நாட்டிற்கு தங்க பெருமையை பரிசளித்திருக்கிறார் அந்த விவசாயி மகள் கோமதி!
அகழ்வானையும் தாங்கும் நிலம் போலத் தான், தன்னை இகழ்வோனுக்கும் பரிசளிக்கிறார் விவசாய பண்பாட்டின் மகள்!
- அருண் பகத்
**********
‘துறவியாகவே ஆசைப்பட்டேன், பிரதமராக நினைத்ததில்லை’
-பிரதமர் மோடி
ராணுவவீரர் ஆக ஆசைப்பட்டேன் பிரதமராக ஆசைப்படவில்லை
-இதுவும் அதே பேட்டியில்
பிரதமர் மோடி
எது உண்மை
இரண்டுமே உண்மையில்லை
அத்தனை உள் அரசியலைத் தாண்டி காய்களை நகர்த்தி விளம்பர நிறுவனங்களை
வாடகைக்கு அமர்த்தி பிம்பங்களைக் கட்டி..பிரதமர் ஆகியிருக்கிறார்
இதைவிடவும்
துறவியாவது எளிது. ஒரு காவியோடு காசிக்கு போயிருக்கமுடியும்.
ஆனால் அவர் ஆக நினைத்தது பிரதமர்தான்
பிரதமராக ஆகியிருக்கிறார்.
- லட்சுமணசாமி ஒடியன் ரங்கசாமி