election-2019

img

வலைப் பேச்சு

தென்சென்னை தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் 207 வாக்குகள்
பெற்று பின்னடைவு# சொந்தக்காரங்க 200 பேர் இருக்காங்க போலயே..!
- தாடிக்காரன்
*************
தேசிய கட்சி, மாநில கட்சி, மகளிர்,
சிறுபான்மையினர், தாழ்த்தப்பட் டோர், இடதுசாரிகள், எழுத்தாளர்கள் என
ஒரு சமூகநீதி படையையே இந்திய நாடாளு
மன்றத்திற்கு அனுப்பியிருக்கிறது தமிழகம்.
மீதியை இனி வரலாறு சொல்லும்.
- நெல்சன் விஜய்
*************
‘பாஜக பெரும் வெற்றி!!
தேர்தல் ஆணையத் தலைமை யகத்தில் இனிப்பு கொடுத்துக் கொண்டாட்டம்’ என்று ஏன் இன்னும் செய்திகள் வரவில்லை!?
- கோழியார்
*************
கிரிக்கெட் மேட்ச்சை யார் ஜெயிப் பாங்க என்ற சுவாரஸ்யம் மட்டுமே
மக்களுக்கு, மற்றபடி விளையாடு பவர்களுக்கும், அவர்களின் ஸ்பான்சர்க ளுக்கு மட்டுமே லாபம்... அது போலவே தேர்தல் முடிவுகளும்.
- மோகன் ராம்கோ
*************
திமுக வெற்றியால் தமிழகத்திற்கு எந்த பலனும் இல்லை - தமிழிசை #
பரவால்ல நீங்க காண்டாவுனீங்கல்ல அதுவே போதும்..?!
- சுல்தான்
*************
ஓட்ட பூறா பிஜேபிக்கு குத்திட்டு.. அங்க வாழ முடியாம தமிழ்நாட்டுக்கு ஓடியாந்துறது
- பிளாக் ஆப்.
*************
எடப்பாடியின் சொந்த தொகுதியான சேலம் உட்பட தமிழகத்தில் அத்தனை
தொகுதிகளிலும் அதிமுக தோல்வி முகத்தில் இருக்கும்போது தேனியில் ஓ.பி.எஸ். மகன் மட்டும் தொடர்ந்து முன்னிலை
வகிப்பதை வைத்து பார்க்கும்போது எடப்பாடியைவிட ஓ.பி.எஸ்.சே கெத்து.
(கொளுத்திப்போடுவோம். பத்தி்கட்டும்)
- ரஹீம் கஜாலி
*************
பாஜக ஜெயிச்சிடுச்சேனு வருத்தப்படக் கூடாது. நமக்கு 15 லட்சம் கிடைக்க இன்னும் வாய்ப்பு இருக்குன்னு சந்தோஷப்படணும்
பி பாசிட்டிவ்
- சிவாஸ்
ஜெ. தீபா ஆதரவளித்தும் கூடவா அதிமுக இப்படியான படு தோல்வியை நாடாளுமன்ற தேர்தலில் சந்தித்திருக்கிறது...
ஓ மை காட்!!!
- நிரஞ்சன்