குழந்தைகள் நல மையங்களுக்கு சுற்றுச்சுவர்
நாகைமாலி எம்எல்ஏ-வின் கேள்விக்கு அமைச்சர் கீதாஜீவன் பதில்
தமிழ்நாடு சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரத்தின் போது, “நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் தொகுதியில், வேட்டைக் காரனிருப்பு பகுதியில் குழந்தைகள் மையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா” என நாகைமாலி கேள்வி யெழுப்பினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் கீதா ஜீவன், “வேட்டைக்காரனிருப்பு பகுதியில் 1982 ஆம் ஆண்டு முதல் குழந்தைகள் மையம் செயல்பட்டு வரு கிறது. ஆரம்பத்தில் சமுதாயக் கூடத்தில் நடத்தப்பட்டு வந்தது. 2004- 05 ஆம் ஆண்டில் சுனாமி மறுவாழ்வு திட்டத்தின் மூலம் 7.50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு புதிதாக கட்டிடம் கட்டப்பட்டு, திறக்கப்பட்டு நல்ல முறை யில் செயல்பட்டு வருகிறது” என்றார். “புதிதாக குழந்தைகள் மையம் அமைத்து கொடுத்ததற்கு நன்றி. அதே நேரத்தில் குழந்தைகள் நல மையங்களுக்கு புதிதாக கட்டிடம் கட்டும் போது, சுற்றுச்சுவர் கட்டிக் கொடுப்ப தில்லை. இதனால், குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக அமைந்து விடுகிறது. எனவே, இனிமேல் குழந்தை கள் நல மையம் கட்டும்போது சுற்றுச்சுவரும் காட்டிக் கொடுப்பதற்கு திட்ட மதிப்பீட்டில் கூடுதலாக நிதி ஒதுக்கப்படுமா?” என்று நாகைமாலி துணை கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர், “குழந்தை நல மையங்களை சீர்மிகு மையங்களாக மாற்ற தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த ஆண்டு, அனுமதி அளிக்கப்பட்ட 1,503 மையங்களில் 1,203 மையங்களுக்கு கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 500 குழந்தைகள் மையங் களுக்கு கட்டிடம் கட்ட முதலமைச்சர் ஸ்டாலின் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும், உறுப்பினர் நாகை மாலி கூறியதுபோல், சாலை அருகே அமைந் துள்ள குழந்தைகள் மையங்களுக்கு சுற்றுச்சுவர் கட்டிக் கொடுப்பது அவசிய மாகிறது. எனவே முன்னுரிமை அடிப்ப டையில் உறுப்பினர் பட்டியல் கொடுக் கும் பட்சத்தில் அது தொடர்பாக அரசு பரிசீலிக்கும்” என்றார். நாகை மாலி, தனது தொகுதியில் குழந்தைகள் மையங்கள் பல இடங்களில் பழைய கட்டிடத்தில் செயல் பட்டு வருகின்றன. சில பகுதிகளில் வாடகை கட்டிடங்களில் இயங்கி வருகிறது. சில இடங்களில் கட்டிடங்கள் பழுதடைந்த நிலையில் இருக்கிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறைக்கு கடிதம் கொடுத்திருக்கிறேன். இது குறித்து ஆய்வு செய்து உரிய நட வடிக்கை மேற்கொள்ளப்படுமா என்றும் வினவினார். இதற்கு பதிலளித்த அமைச்சர், “நாகப்பட்டினம் மாவட்டத்தில் 633 குழந்தைகள் மையம் செயல்பட்டு வருகிறது. அதில், 489 மையங்கள் சொந்த கட்டிடங்களில் இயங்கி வரு கிறது. இதர அரசு கட்டிடங்களில் வாடகை இல்லாமல் 84 மையங்கள் செயல்படுகிறது. தனியார் கட்டடங் களில் வாடகையில் 63 மையங்கள் இயங்கி வருகின்றன. கீழையூரில் 7 மையங்களில் செயல்பட்டு வருகிறது. பழுதடைந்துள்ள மையங்களின் கட்டி டங்களை சீரமைத்து கொடுப்போம்” என்றார்.