tamilnadu

img

தில்லி காவல்துறைக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

தில்லி காவல்துறைக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

உமர் காலித் உள்ளிட்டோ ரின் ஜாமீன் மனு தொடர்பாக தில்லி காவல்துறைக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற் கெதிராக 2020 பிப்ரவரியில் தில்லியில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தை சீர்குலைக்கும் நோக்கத்தில் இந்துத்துவா குண்டர்கள் வன்முறையை தூண்ட, வடக்கு தில்லி யில் கலவரம் வெடித்தது.  இந்த வன்முறை தொடர்பாக இந்துத்துவா குண்டர்கள் மீது நட வடிக்கை எடுக்காமல், தில்லி ஜவஹர் லால் நேரு பல்கலைக்கழக (JNU) முன்னாள் ஆராய்ச்சி மாணவர் உமர் காலித் மற்றும் ஷர்ஜீல் இமாம் உள்ளிட்ட 9 பேர் 2020ஆம் ஆண்டு செப்டம் பர் மாதம் சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ் கைது  செய்யப்பட்டனர். 9 பேரும் 5 ஆண்டு களுக்கு மேல் சிறையில் உள்ளனர். இந்நிலையில், உமர் காலித் உள்ளிட் டோரின் ஜாமீன் மனுக்கள் (தில்லி  உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து) திங்க ளன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் என்.வி.அஞ்சாரியா ஆகி யோர் அடங்கிய அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. உமர் காலித் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், “மனுதாரர்கள் 5 ஆண்டு களுக்கும் மேலாக சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர்” என்பதை எடுத்துரைத் தார். தொடர்ந்து தில்லி காவல்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜு பதிலளிக்க 2 வாரங்கள் காலஅவகாசம் கோரினார். ஆனால் உச்சநீதிமன்ற நீதிபதிகள், “நாங்கள் உங்களுக்கு போதுமான அவகாசம் அளித்துள்ளோம். நீங்கள் முதல் முறையாக ஆஜராகலாம். அதற்கு  நாங்கள் என்ன செய்வது? கடந்த முறை நாங்கள் நோட்டீஸ் அனுப்ப உத்தர விட்டோம். மேலும் நீதிமன்றத்தில் அக்டோபர் 27ஆம் தேதி இந்த வழக்கை விசாரித்து முடித்து வைப்போம் என்று கூறினோம்.ஆனால் இன்னும் அவ காசம் கோருகிறீர்கள். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் கடந்த 5 ஆண்டுகளாக விசாரணையே இல்லாமல் சிறையில் உள்ளனர். 2 வாரம் அவகாசம் எல்லாம் அளிக்க முடி யாது. வெள்ளிக்கிழமை (அக்., 31) பதி லளிக்க வேண்டும்” என்று கூறி வழக்கை  அக்., 31க்கு ஒத்திவைத்தனர்.  முன்னதாக மனுதாரர்கள் 5 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து தில்லி காவல்துறைக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் கடும்  கண்டனம் தெரிவித்தனர்.