tamilnadu

img

உமர் காலித், ஷர்ஜீல் இமாமுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் மறுப்பு

உமர் காலித், ஷர்ஜீல் இமாமுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் மறுப்பு

புதுதில்லி மோடி அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக 2020ஆம் ஆண்டு நாடு முழுவதும் போராட் டங்கள் வெடித்தன. குறிப்பாக தில்லி யில் நடைபெற்ற போராட்டங்கள் வன் முறையாக மாறின. இந்த வன்முறை யில்  53 பேர் உயிரிழந்தனர், 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த வன்முறையில் தொடர்பு இருப்பதாகக் கூறி தில்லி ஜேஎன்யு பல்கலைக்கழக மாணவர்கள் உமர் காலித், ஷர்ஜில் ஜிமாம் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த 5 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் உமர் காலித் உள்ளிட்டோருக்கு தொடர்ந்து ஜாமீன் மறுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் உமர் காலித் உள்ளிட்டோர் (7 பேர்) தாக்கல் செய்த ஜாமீன் மனு உச்சநீதிமன் றத்தில் திங்களன்று மீண்டும் விசார ணைக்கு வந்தது. வாதங்களுக்குப் பிறகு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அரவிந்த் குமார், என்.வி.அஞ்சாரியா அமர்வு,”சட்டவிரோத தடுப்பு நடவ டிக்கைகள் சட்டத்தில் (உபா), ஜாமீனுக்கான வரம்பு அதிகமாக உள்ளது. அனைத்து மேல்முறை யீட்டாளர்களும் குற்றத்தின் அடிப்படையில் சமமான நிலையில் இல்லை என்பதை ஆவணங்கள் காட்டுகின்றன.  உபா தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதால் உமர் காலித், ஷர்ஜில் இமாம் ஆகியோரு க்கு அரசியல் சாசனப் பிரிவு 21இன் கீழ் அடிப்படை உரிமைகளை பெற தகுதி இல்லை. உமர் காலித், ஷர்ஜில் இமாம் அனுபவித்து வரும் சிறைவாசம், விசாரணைக்கு முந்தையது; இது தண்டனை கிடை யாது. எனவே, ஒவ்வொரு மேல்முறை யீட்டையும் தனித்தனியாக ஆராய்வது அவசியமாகிறது. மற்ற குற்றவாளிகளுடன் ஒப்பிடும்போது, உமர் காலித், ஷர்ஜீல் இமாம் ஆகியோர் முற்றிலும் மாறு பட்ட நிலையில் உள்ளனர். உமர் காலித், ஷர்ஜீல் இமாம் ஆகியோ ருக்கு எதிராக முதல்நிலை குற்றச் சாட்டுக்கள் இருப்பதற்கான ஆதா ரங்களை அரசு தரப்பு சமர்ப்பித் துள்ளது. இதில், நீதிமன்றம் திருப்தி அடைகிறது. எனவே, இந்த வழக்கு விசாரணையின் இந்த கட்டத்தில் அவர்களுக்கு ஜாமீன் வழங்குவது நியாயமற்றது. அதேநேரத்தில், குல்பிஷா பாத்திமா, மீரான் ஹைதர், ஷிபா உர் ரஹ்மான், முகமது சலீம் கான், ஷதாப் அகமது உள்ளிட்ட 5 பேருக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது. ஜாமீன் வழங்கப்படுவதால் இவர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை அது நீர்த்துப்போகச் செய்யாது. சில கடுமையான நிபந்தனைகளுக்கு உட்பட்டே அவர்களை ஜாமீனில் விடுவிக்க வேண்டும். நிபந்தனை களை மீறினால் 5 பேரின் ஜாமீன் ரத்து  செய்யப்படும்” என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தமது தீர்ப்பில் தெரி வித்துள்ளனர். இதனால் 5 ஆண்டுகளாக சிறை வாசம் அனுபவித்து வரும் உமர் காலித், ஷர்ஜில் இமாம் இருவரும் தொடர்ந்தும் சிறையிலேயே இருக்கும் நிலை உருவாகி உள்ளது.