tamilnadu

img

மகாராஷ்டிரா முதல் பெண் துணை முதலமைச்சராக சுநேத்ரா பவார் பதவியேற்றார்

மகாராஷ்டிரா முதல் பெண் துணை முதலமைச்சராக சுநேத்ரா பவார் பதவியேற்றார்

மறைந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் அஜித் பவா ரின் மனைவி சுநேத்ரா பவார், மகாராஷ்டிராவின் துணை முதல மைச்சராக சனியன்று பொறுப்பேற்றுக் கொண்டார். அஜித் பவாருக்குப் பதி லாகப் புதிய தலைவரைத் தேர்ந்தெ டுப்பதற்காக, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற எம்எல்ஏ-க்கள் கூட்டம் சனியன்று மதியம் நடை பெற்றது. இந்தக் கூட்டத்தில் மாநிலங்க ளவை எம்.பி.,யான சுநேத்ரா பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்ட மன்ற தலைவராக தேர்வு செய்யப் பட்டார். தொடர்ந்து சனியன்று மாலை ஆளுநர் ஆச்சார்யா தேவ்விரத், முதல மைச்சர் தேவேந்திர பட்நாவிஸ், துணை  முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே ஆகி யோர் முன்னிலையில் மகாராஷ்டிரா முதல் பெண் துணை முதலமைச்சராக சுநேத்ரா பவார் பொறுப்பேற்றுக் கொண்டார்.