states

img

தேசியவாத காங்கிரஸ் கட்சியை ஒன்றிணைக்க சரத் பவார் அவசர ஆலோசனை அதிர்ச்சியில் பாஜக - சிவசேனா (ஷிண்டே)

தேசியவாத காங்கிரஸ் கட்சியை ஒன்றிணைக்க சரத் பவார் அவசர ஆலோசனை அதிர்ச்சியில் பாஜக - சிவசேனா (ஷிண்டே)

மும்பை பாஜக மிரட்டலுக்கு அஞ்சி கடந்த 2023 ஜூலை மாதம், முன்னாள் முத லமைச்சர் சரத் பவார் நிறுவிய தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து, அவரது அண்ணன் மகன் அஜித் பவார் 40 எம்எல்ஏக்களுடன் பாஜக - ஷிண்டே கூட்டணியில் (மஹாயுதி) இணைந்து துணை முதலமைச்சரானார். தேர்தல் ஆணையம் அஜித் பவார் தலை மையிலான பிரிவே ‘அசல் தேசிய வாத காங்கிரஸ்’ என்று அங்கீக ரித்து, கடிகாரம் சின்னத்தையும் வழங்கியது.  தொடர்ந்து 2024 சட்டமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்ற நிலையில், அஜித் பவார் மீண்டும் துணை முதலமைச்சரா னார். சமீபத்தில் உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தின் போது தேசியவாத காங்கிரஸ் கட்சியின் இரு பிரிவுகள் பிப்., 12 அன்று ஒன்றிணையும் என அஜித் பவார் கூறினார். ஆனால் விமான விபத்தில் அவர் உயிரிழந்தார். இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் ஒன்றிணைய சரத் பவார் விருப்பம் தெரிவித்து, அதற்கான ஆலோசனையை தொ டங்கி உள்ளதாக செய்திகள் வெளி யாகியுள்ளன. இதுதொடர்பாக சரத் பவார் ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், “அஜித் பவார், சஷிகாந்த் ஷிண்டே, ஜெயந்த் பாட்டீல் ஆகி யோர் தேசியவாத காங்கிரஸ் கட்சி யின் இரண்டு பிரிவுகளையும் இணைப்பது குறித்த பேச்சு வார்த்தையைத் தொடங்கினர். இரு பிரிவுகளின் இணைப்புக்கான தேதியும் ஏற்கெனவே நிர்ண யிக்கப்பட்டிருந்தது.  இதுதொடர்பாக பிப்., 12 அன்று நாங்கள் அறிவிக்க இருந்தோம். துரதிர்ஷ்டவசமாக அதற்கு முன்பே அஜித் பவார் நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார். இரு தரப்பி னரும் ஒன்றிணைய வேண்டும் என்பதே எங்கள் விருப்பமும்கூட” என அவர் கூறியுள்ளார். சரத் பவாரின் பேச்சு பாஜக - சிவசேனா (ஷிண்டே) இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பதற்றத்தில் பாஜக சரத் பவார் கட்சியை ஒன்றி ணைக்க முயற்சி செய்வார் என்ற அச்சத்தில் பாஜகவின் ஆலோச னையால் அஜித் பவார் உயிரி ழந்த இரண்டே நாட்களில், தேசிய வாத காங்கிரஸ் கட்சியின் சட்ட மன்றக் கூட்டம் சனிக்கிழமை நடை பெற்றது. அவசர அவசரமாக நடை பெற்ற இந்த கூட்டத்தில் அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றத் தலைவராக (துணை முதலமைச்சர்) தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.  பாஜகவின் அழுத்தம் மற்றும் மிரட்டல் காரணமாகவே இந்நிகழ்வு நடந்துள்ளது. அதனால் தேசியவாத காங்கிரஸ்  கட்சியை ஒன்றிணைக்க சரத் பவார் அடுத்தகட்ட ஆலோச னைக் கூட்டங்களை நடத்தி வரு வதாக செய்திகள் வெளியாகி யுள்ளன. சரத் பவார் பாஜக பக்கம் சாயமாட்டார் என்பதால் தேசிய வாத காங்கிரஸ் கட்சி (அஜித்) பவார் பிரிவை காப்பாற்ற பாஜக தேசிய தலைவர்கள் மகா ராஷ்டிராவிற்கு பயணம் மேற் கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.