tamilnadu

img

தாயின் உடல் முன்பு ஆசீர்வாதம் பெற்று தேர்வுக்கு எழுதச் சென்ற மாணவி

தாயின் உடல் முன்பு ஆசீர்வாதம் பெற்று 
தேர்வுக்கு எழுதச் சென்ற மாணவி

பட்டுக்கோட்டை அருகே செவ்வாய்க் கிழமை அதிகாலை, மார டைப்பால் இறந்த தாயின் உடல் முன்பு ஆசீர்வாதம் வாங்கி விட்டு, மாணவி தேர்வுக்குச் சென்ற சம்ப வம் பலரையும் சோகத் தில் ஆழ்த்தியது. தஞ்சாவூர் மாவட்டம்  பட்டுக்கோட்டையை அடுத்த வெட்டுவாக் கோட்டை, ராமாபுரம் பகுதியைச் சேர்ந்தோர்  ராஜேந்திரன் - கலா தம்பதி. இவர்களின் மூன்றாவது மகள் காவியா (17), ஊரணி புரம் அரசு மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2  படித்து வருகிறார். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை பிளஸ்-2 உயிரியல் பாடப்பிரிவு பொதுத் தேர்வுக்கு காவியா தயாராகி வந்தார். ஆனால், காவியாவின் தாய் கலா, திடீரென  மாரடைப்பால் உயிரிழந்தார். இதனால் நிலை குலைந்து போனார் காவியா. இருப்பினும், தேர்வை எழுதி விட வேண்டும் என்ற எண்ணத்தில், காவியா தனது தாயின் உடல்  முன் கதறி அழுதபடியே ஆசீர்வாதம் வாங்கி  விட்டு, தேர்வு எழுதச் சென்றார்.  இதுகுறித்து மாணவி காவியா கூறுகை யில், “எனது அப்பா ராஜேந்திரன் மன வளர்ச்சி குன்றியவர். எனது தாய்தான் எங்கள்  குடும்பத்தின் தூண். எனக்கு, காயத்ரி என்ற  அக்காவும், திருச்செல்வம் என்ற அண்ண னும் உள்ளனர். எனது அண்ணன் கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு பி.ஏ படித்து வருகிறார். அக்காவுக்கு 15 நாட்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. படிப்புதான் முக்கியம், படித்து ஆளாகி அப்பாவை நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும் என எனது அம்மா கூறுவார். நான் ஒவ்வொரு முறையும் தேர்வு எழுதச் செல்லும்போது, எனது அம்மா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிவிட்டு, தேர்வு  எழுதச் செல்வது வழக்கம். அவர் இறந்த தால், எனது வருங்காலமும், குடும்பத்தின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகி விட்டது”  என்றார் கண்ணீருடன்.