ஜெய்ப்பூர் ராஜஸ்தான் மாநிலத்தின் முக்கிய நக ரங்களில் ஒன்றான கோட்டா “பயிற்சி மையங்களின் பூங்கா” ஆகும். இங்கு சிவில் சர்வீஸ் (ஐஏஎஸ், ஐபிஎஸ்), எஸ்எஸ்சி, மாநில அரசு பணி தேர்வுகளுக்கும், நீட், ஜேஇஇ, நெக்ஸ்ட், நெட் உள்ளிட்ட நுழை வுத் தேர்வுகளுக்கு தயாராகும் வகையில் ஆயிரக்கணக்கான பயிற்சி மையங்கள் கோட்டா வில் இருப்பதால் “பயிற்சி மையங்களின் பூங்கா” என அழைக்கப்படுகிறது. ஒரே இடத்தில் தேவையான புத்தகங்கள், பயிற்சி மையங்கள், தங்குமிடம், உணவு என சகல வசதிகள் கிடைப்பதால் கோட்டாவில் ராஜஸ்தானைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி நாடு முழுவதும் மாணவர்கள், தேர்வர்கள் தங்கிப் படிக்கின்றனர். இதனால் பயிற்சி மையக் கட்டணம், ஹோட்டல், விடுதிக் கட்டணம் மூலம் ஒவ்வொரு ஆண்டும் கோட்டா நகர வருவாய் ரூ.6,500 முதல் 7,000 கோடியாக உள்ளது. இத்தகைய சூழலில் மாணவர்கள் தற்கொலை, மாநில பாஜக ஆட்சியின் அடாவடி காரணமாக 2024ஆம் ஆண்டில் கோட்டா நகரத்தின் பயிற்சி மையங்களின் தொடர்புள்ள வருமானம் பாதியாகக் குறைந்துள்ளது. அதாவது ரூ.3,000 கோடியாக மிக மோச மான அளவில் சரிந்துள்ளது. மாணவர்கள் தற்கொலை அதிகரித்து வருவதால் தங்கள் பிள்ளைகளை கோட்டா விற்கு அனுப்ப பெற்றோர்கள் அஞ்சுகின்றனர். இதன் காரணமாகவே கோட்டாவிற்கு வருகை தரும் மாணவர்கள் மற்றும் தேர்வர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. மாணவர்கள் வருகை மற்றும் கடந்த காலங்களை விட குறைவான வருமானம் உள்ளிட்ட காரணங்களால் பயிற்சி மையங்கள் மற்றும் விடுதிகள் மூடும் எண்ணிக்கையும் ஜெட் வேகத்தில் அதிகரித்து வருகின்றன. இது ஒருபுறம் என்றால் 2023இல் ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைத்த பின்பு பாஜகவினரின் மாமூல் மற்றும் தேர்வுகளில் முறைகேடு செய்ய தூண்டுதல் பிரச்சனைகள் காரணமாக கோட்டாவை விட்டு பயிற்சி மையங்கள் தில்லிக்கு ஓட்டம் பிடித்து வருகின்றன. இதனால் கோட்டாவின் பயிற்சி மைய பூங்கா பகுதி தனிச்சிறப்பை இழந்து வருகிறது. பாஜக ஆட்சிக்கு வந்த பின்பே எங்களின் நிலைமை மோசமாகி விட்டது என பயிற்சி மையங்களின் உரிமையாளர்கள், விடுதி மற்றும் ஹோட்டல் உரிமையாளர்கள் குற்றம் சாட்டி கோட்டாவை விட்டு நாட்டின் மற்றொரு பயிற்சி மையங்களின் பூங்காவான தில்லி ராஜேந்தர் நகருக்கு இடமாற்றம் செய்து வரு கின்றனர்.