tamilnadu

அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்த போராட்டத்தை ஒடுக்கும் காவல்துறை மாணவர், வாலிபர் மற்றும் மாதர் சங்கங்கள் கண்டனம்!

அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்த போராட்டத்தை ஒடுக்கும் காவல்துறை மாணவர், வாலிபர் மற்றும் மாதர் சங்கங்கள் கண்டனம்!

சென்னை, ஜன. 6- வெனிசுலா நாட்டின் இறை யாண்மையில் தலையிடும் அமெரிக்காவின் போக்கைக் கண்டித்தும், அந்நாட்டு ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவிற்கு ஆதர வாகவும் சென்னையில் போராட்டம் நடத்த முயன்ற தோழர்கள் மீது  ஏவப்பட்ட காவல்துறை அடக்கு முறையை இந்திய மாணவர் சங்கம் (SFI), இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் (AIDWA) ஆகிய அமைப்புகள் வன்மையாகக் கண்டித்துள்ளன.  தரமணியில் செவ்வாய் காலை 11 மணிக்கு நடைபெறவிருந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்குத் தயாரான நிலை யில், காலை முதலே 100-க்கும்  மேற்பட்ட போலீசார் அலுவல கத்தைச் சூழ்ந்து அச்சுறுத்தினர். அமைப்புகளின் மாநிலத் தலைவர் கள் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருந்தபோதும், அதைப் பொருட் படுத்தாத காவல்துறை அதிகாரிகள், “முன்னெச்சரிக்கை கைது” என்ற பெயரில் அலுவலகத்திற்குள் புகுந்து அராஜகமாகச் செயல்பட்டனர்.  வாலிபர் சங்கத்தின் மாநிலத் தலைவர் செல்வராஜ், மாதர் சங்கத்தின் மாநிலத் தலைவர் பிர மிளா, செயலாளர் ராதிகா, துணைத் தலைவர் வாலண்டினா, மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் மிரு துளா உள்ளிட்ட முக்கிய நிர்வாகி களை வலுக்கட்டாயமாகத் தரதர வென இழுத்துச் சென்று போலீ சார் கைது செய்தனர். இந்த அடக்குமுறைக்கு எதிர்ப்புத் தெரி வித்து தரமணி சிக்னலில் மறியலில் ஈடுபட்ட மற்ற தோழர்களும் கைது செய்யப்பட்டனர்.  ஜனநாயக ரீதியாகப் போராடும் உரிமையை நசுக்கும் தமிழக காவல்துறையின் இச்செயல் அர சியல் சாசனத்திற்கு எதிரானது. அமெரிக்காவிலேயே ஜனாதிபதிக்கு எதிராகப் போராட்டங்கள் நடக்கும் நிலையில், தமிழக காவல்துறை யாருக்கு விசுவாசம் காட்ட இத்த கைய அராஜகத்தில் ஈடுபடு கிறது என்ற கேள்வி எழுகிறது. கைது செய்யப்பட்ட தோழர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும், இத்தகைய போக்கை கைவிட வேண்டும் என்றும் சங்கங்களின் கூட்டறிக்கை வலியுறுத்தியுள்ளது.