சென்னை, ஜன. 9 - போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிடில் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதைத் தவிர வேறு வழியில்லை என்று சிஐடியு மாநிலத் தலைவர் அ. சவுந்தரராசன் கூறியுள்ளார். போக்குவரத்து கழகங்களுக்கு ஏற் படும் இழப்பை அரசு ஈடுசெய்வதில்லை. இதனால் கழகங்கள் கடும் நிதி நெருக்க டியில் உள்ளன. 100 ரூபாய் வசூலானால் அதில் 12 ரூபாய் வங்கி வட்டியாக செலுத்தப் படுகிறது. வங்கிகளில் கடனோடு, தொழி லாளர்களது சேமிப்பான வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை போன்றவற்றை யும் நிர்வாகங்கள் அறக்கட்டளைக்கு செலுத்தாமல் செலவு செய்கின்றன. இவ்வா றாக தொழிலாளர்களது 15 ஆயிரம் கோடி ரூபாயை நிர்வாகம் செலவு செய்துள்ளது. இதனால், 2023 மார்ச் மாதத்திற்கு பிறகு ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு 3 ஆயிரத்து 500 கோடி ரூபாயும், ஓய்வூதி யர்களுக்கு 9 ஆண்டுகளாக அகவிலைப் படி உயர்வு தராமல் 3 ஆயிரத்து 500 கோடி ரூபாயும் நிலுவை வைத்துள்ளனர். அகவிலைப்படி நிலுவையை வழங்க நீதி மன்றம் உத்தரவிட்ட பிறகும், தேவையற்ற முறையில் மேல்முறையீடு செய்து வருகின்றனர்.
மறைமுக தனியார்மயம்
2017-ஆம் ஆண்டு 20 ஆயிரத்து 776 பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில், தற்போது 19 ஆயிரத்து 290 மட்டுமே இயக்கப்படுகின்றன. 1500 பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. ஒருநாளைக்கு ஒரு கோடி கிலோ மீட்டர் இயக்கப்பட்ட பேருந்து கள், தற்போது 80 லட்சம் கி.மீ., மட்டுமே இயக்கப்படுகின்றன. அதாவது ஏராள மான வழித்தடங்களில் பேருந்து இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது. நிரந்தரத் தன்மையுள்ள வேலை களில் ஒப்பந்த அடிப்படையில் தொழிலா ளர்களை நியமனம் செய்கின்றனர். 30 ஆயிரம் காலிப் பணியிடங்களை நிரப்ப மறுக்கின்றனர். அரசு பேருந்துகளை பராமரித்து இயக்க தனியார் நிறுவனங் களுக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. இதன்மூலம் மறைமுக தனியார்மய நடவடிக்கைகளை அரசு தொடங்கியுள்ளது.
அதிமுக அரசாணை
வாரிசுக்கு வேலை மறுப்பது, பேருந்து எண்ணிக்கையைக் குறைப்பது என அதிமுக ஆட்சியில் பிறப்பிக்கப்பட்ட 8 அரசா ணைகளை திமுக அரசு தீவிரமாக செயல் படுத்தி வருகிறது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டு வருவோம் என்ற தேர்தல் வாக்குறுதியை அரசு அமல்படுத்த மறுத்து வருகிறது. 20 ஆண்டு களாக எந்தவிதமான ஓய்வூதியமும் இல்லாத மாநிலமாக தமிழகம் மட்டுமே உள்ளது. ஊதிய ஒப்பந்தம் முடிவுக்கு வந்து ஓராண்டுக்கு மேலாகியும் புதிய ஒப்பந்தத்தைப் பேசி முடிக்க அரசு முன்வராமல் உள்ளது. இந்நிலையில், போக்குவரத்து கழகங் களின் வரவுக்கும், செலவுக்குமான வித்தி யாசத் தொகையை வழங்க வேண்டும். போக்குவரத்து கழகங்களை மேம்படுத்தும் நடவடிக்கைகள் எடுப்பதுடன், மறைமுக மாக தனியார்மயம், ஒப்பந்தமுறை நிய மனத்தை கைவிட வேண்டும், ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு ஓய்வு பெறும் நாளன்றே ஓய்வுகால பலன், ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டும். தர்ணா போராட்டம் தேர்தல் வாக்குறுதி அடிப்படையில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், காலிப்பணியிடங்களைப் நிரப்ப வேண்டும், வாரிசு வேலை வழங்க வேண்டும், ஊதிய ஒப்பந்தத்தைப் பேசி இறுதிப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்லவன் இல்லம் முன்பு தமிழ்நாடு அரசு போக்கு வரத்து ஊழியர் சம்மேளனம் (சிஐடியு) சார்பில் வியாழனன்று தர்ணா நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அ. சவுந்தரராசன் கூறியதாவது: “ஊதிய ஒப்பந்தம் 5 ஆண்டுகளை கடந்தும் அரசு பேச்சுவார்த்தை நடத்தாமல் உள்ளது. அகவிலைப்படி உயர்வை வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் அதை அமல்படுத்த மறுக்கின்றனர். கடந்தா ண்டும் இதேநாளில் (ஜன.9) மேற்கண்ட கோரிக்கைகளுக்காக வேலைநிறுத்தம் செய்தோம். அதில், தலையிட்ட உயர்நீதிமன்றம், கோரிக்கைகள் நியாயம், வேலைநிறுத்தம் நியாயம். எனவே, வேலைநிறுத்தத்தை தடை செய்யவில்லை. பொங்கல் என்பதால் வேலைநிறுத்தத்தை கைவிட வேண்டும் என்று கூறியது. அத னை ஏற்றுக் கொண்டோம். ஓராண்டு கடந்தும் கோரிக்கைகளை அரசு நிறை வேற்றவில்லை. எனவே, பொங்கலுக்கு பிற கும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளவில்லை என்றால் வேலை நிறுத்தம் தவிர்க்க இயலாது” என்றார். “தேர்தல் வாக்குறுதியில் தொழிலாளர் கள் நலன் சார்ந்து கூறியவற்றை எதையும் அரசு நிறைவேற்றவில்லை. பழைய ஓய்வூதி யத் திட்டம், திட்டப் பணியாளர்கள், ஒப்பந்த ஊழியர்கள் பணி நிரந்தரம் போன்றவற்றை நிறைவேற்றவில்லை. அதிமுக ஆட்சியில் அவுட்சோர்சிங்கை எதிர்த்து விட்டு, இப்போது அமல்படுத்துகிறார்கள். தனியார்மயத்தை சிறிது சிறிதாக செய்து வருகின்றனர். போக்குவரத்து கழகத்தை தனியார் மயமாக்கும் கொடிய செயலை செய்கின்றனர்” என்றும் அவர் கூறினார்.
ஜி. சுகுமாறன்
போராட்டத்தை தொடங்கி வைத்து பேசிய சிஐடியு மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன், “சி மற்றும் டி பிரிவு பணியிடங்கள் அனைத்தும் அவுட்சோர்ஸ் செய்து தனியார்மயமாக்கப்பட்டு வருகிறது. போக்குவரத்திலும் இதைச் செய்கின்றனர். இதனை எதிர்த்து மாநிலந் தழுவிய போராட்டத்தை சிஐடியு நடத்த உள்ளது. அதில் போக்குவரத்து தொழிலாளர்களும் பங்கேற்க வேண்டும்” என்றார். கே. ஆறுமுகநயினார் “இதே கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்தாண்டு ஜன.9ந் தேதி வேலைநிறுத்தம் நடத்தினோம். அப்போது துறை அமைச்சர், கோரிக்கைகள் தொடர்பாக முதலமைச்சரி டம் பேசி நடவடிக்கை எடுப்பதாக பேட்டி அளித்தார். ஓராண்டாகியும் எந்த முன்னேற்றமும் இல்லை” என்று சம்மேள னத்தின் பொதுச் செயலாளர் கே. ஆறுமுக நயினார் குறிப்பிட்டார்.