tamilnadu

img

நாச்சியார்கோவில் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தும் தெரு நாய்கள்

நாச்சியார்கோவில் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தும் தெரு நாய்கள்

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவில் பகுதிகளில் தெருக்களிலும், அங்குள்ள சீனிவாச பெருமாள் கோவில் பகுதியிலும் தெரு நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றி வருகின்றன.  இதனால், கோவிலுக்கு வரும் பக்தர்கள், குழந்தைகள் பள்ளிக்குச் செல்லவும், தெருக்களில் வெளியில் வரவும் மிகவும் அச்சமடைந்த நிலையில் உள்ளனர். மேலும், சில நாய்கள் சொறி நாய்களாக திரிவதால், மனிதர்களுக்கு நோய்த் தொற்று பரவ வாய்ப்புள்ளதாக உள்ளது. மேலும், வெறி பிடித்தது போல் சாலையில் செல்லும் இருசக்கர வாகனங்களை துரத்தி விபத்துக்குள்ளாகி, சிலர் அடிப்பட்ட நிலையில் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. ஆகவே, சம்பந்தப்பட்ட நிர்வாகம் நாச்சியார்கோவில் பகுதியில், அதிகமாக நடமாடும் தெருநாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை