விவசாய நிலத்தை கையகப்படுத்தலை நிறுத்துக! ராஜஸ்தானில் விவசாயிகள் மாபெரும் போராட்டம்
பிருந்தா காரத், அம்ரா ராம் பங்கேற்பு
ஜெய்ப்பூர் பாஜக ஆளும் ராஜஸ் தான் மாநிலத்தின் தித்வானா-குச்சாமன் மாவட்டத் தில் விவசாயம் செய்து வரும் நிலத்தை சட்டவிரோத கையகப் படுத்த அறிவிப்பு வெளியானது. கையகப்படுத்தப் போவதாக அறி விக்கப்பட்ட நிலத்தில் சிறு பான்மை மற்றும் பட்டியல் சமூ கத்தைச் சேர்ந்த விவசாயிகள் 70 ஆண்டுகளுக்கும் மேலாக விவ சாயம் மேற்கொண்டு வருகின்ற னர். இதுதொடர்பான பணியை யும் அரசு அதிகாரிகள் தொடங்கி யுள்ளனர். இதனை கண்டித்து அங்கு தொடர் போராட்டம் நடை பெற்று வருகிறது. இந்நிலையில், விவசாய நிலத்தை கையகப்படுத்தலை கண்டித்து திங்களன்று, அகில இந்திய விவசாயிகள் சங்கம் சார்பில் தித்வானா-குச்சாமனில் போராட்டம் மற்றும் பொதுக்கூட் டம் நடைபெற்றது. விவசாயிகள் சங்க தலைவர் பாகிரத் யாதவ் தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிருந்தா காரத், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் அம்ரா ராம் எம்.பி., (சிகார் - ராஜஸ்தான்), மாநிலச் செயலாளர் கிஷன் பாரிக் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மாபெரும் போராட்டம் பொதுக்கூட்டத்திற்குப் பிறகு அம்ரா ராம் மற்றும் சிபிஎம் மூத்த தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பல்வான் புனியாவின் தலைமையில் தித்வானா-குச்சாமன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு மாபெரும் போராட்டம் நடை பெற்றது. விவசாயிகள், சிபிஎம் ஊழியர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். முதலில் விவசாயிகள் - சிபிஎம் - பொதுமக்கள் அடங்கிய பிரதிநிதிகள் குழுவை சந்திக்க மாவட்ட ஆட்சியர் மறுப்பு தெரி வித்தார். மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நுழைய முடியாத படி ராஜஸ்தான் காவல்துறை தடுப்புகளை அமைத்தது. அம்ரா ராம் உள்பட விவசாயிகள் தடுப்பு கள் மீது ஏறி போராட்டம் நடத்தி னர். கிளர்ச்சி போராட்டத்தின் பிரம்மாண்டத்தை கண்ட பிறகு மாவட்ட ஆட்சியர் விவசாயிகளின் பிரதிநிதிகளை சந்தித்தார். அப்போது “எந்த நிலமும் கையகப்படுத்தப்படாது” என்று அவர்களிடம் உறுதியளித்தார். எச்சரிக்கை எனினும் நவம்பர் 10ஆம் தேதிக்குள் அனைத்து சட்ட விரோத கையகப்படுத்தல் களை யும் திரும்பப் பெற வேண்டும் என்று பிரதிநிதிகள் குழு இறுதிக் கெடு விதித்துள்ளது. இல்லை யெனில் காலவரையற்ற உண்ணா விரதம் தொடங்கப்படும் என எச்ச ரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
