tamilnadu

பாலஸ்தீனர்களை கொன்று குவிக்கும் இஸ்ரேல் காசாவில் இனப்படுகொலை தாக்குதலை நிறுத்து!

பாலஸ்தீனர்களை கொன்று குவிக்கும் இஸ்ரேல் காசாவில் இனப்படுகொலை தாக்குதலை நிறுத்து!

சிபிஎம் அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்

புதுதில்லி, மே 20 - காசாவில் இனப்படுகொலை செய்வதை இஸ்ரேல் நிறுத்த வேண்டும்; போர்நிறுத்த ஒப்பந்தத்தை அமல்படுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது

: 67 சதவிகிதம் பேர்  பெண்கள் - குழந்தைகள்

காசா மீதான இஸ்ரேலின் தொடர்ச்சி யான ஆக்கிரமிப்புக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலை மைக்குழு தனது ஆழ்ந்த வேதனையை வெளிப்படுத்துகிறது. இஸ்ரேல் தனது தாக்குதல்களை உடனடியாக நிறுத்தி, போர் நிறுத்தத்தை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறது. 2025 ஏப்ரலில் மட்டும், இஸ்ரேலின் வான்வழி மற்றும் தரைவழித் தாக்குதல்களில் 2,037 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். கடந்த இரண்டு நாட்களில், 200-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர். 2023  அக்டோபர் 7 முதல், மொத்தம் 53  ஆயிரத்து 384 பாலஸ்தீனர்கள் கொல்லப் பட்டுள்ளனர். அவர்களில் 94 சதவிகிதம் பேர் பொதுமக்கள். இவர்களிலும் 51 சதவிகிதம் பேர் குழந்தைகள், 16 சதவிகிதம் பேர் பெண்கள், 8 சதவிகிதம் பேர் முதியவர்கள்.

இந்திய அரசாங்கம் கண்டிக்க வேண்டும்

காசாவிற்குள் இரண்டு மாதங் களுக்கும் மேலாக உதவிக்கான வாக னங்கள் நுழைவதை தடுத்து விட்ட இஸ்ரேல், பெயரளவிலான உதவிகளை மட்டுமே அனுமதித்துள்ளது. இதன் விளை வாக, அங்குள்ள மக்கள் கடும் பட்டி னிக்கு ஆளாகியிருப்பதைக் காண்கி றோம். அமெரிக்காவின் ஆதரவால் ஊக்குவிக்கப்பட்ட இஸ்ரேல் இப்போது முழு காசா பகுதியையும் ஆக்கிரமிப்பது பற்றி பேசுகிறது. இந்நிலையில், பாஜக தலைமையி லான இந்திய அரசாங்கம், இனப்படு கொலை தாக்குதல்களை நிறுத்த இஸ்ரே லுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.  போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படு கொலைக்காக இஸ்ரேலின் தலைவர் களை விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் இணைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

பாலஸ்தீன மக்களுடன்  சிபிஎம் ஒருமைப்பாடு

பாலஸ்தீன மக்களுடனும், 1967-க்கு முந்தைய எல்லைகளையும் கிழக்கு ஜெருசலேமை தலைநகராகவும் கொண்ட பாலஸ்தீன நாடு என்ற அவர்களின் நியாய மான கோரிக்கையுடனும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது ஒருமைப் பாட்டை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு அந்த அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.   (ந.நி.)