தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் (சிஐடியு) மாநில பொதுச் செயலாளர் கே.ஆறுமுகநயினார் - கனகலட்சுமி ஆகியோரின் இல்ல திருமண விழா திங்களன்று திண்டுக்கல்லில் நடைபெற்றது. மணமக்கள் ஏ.லட்சுமிகாந்த் பாரதி - ஏ.அர்ச்சனா ஆகியோரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வாழ்த்தினார். சிஐடியு முன்னாள் மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் தலைமை வகித்தார். சிபிஎம் திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் கே.பிரபாகரன் வரவேற்றார். சிபிஎம் மத்தியக் குழு உறுப்பினர் கே.பாலபாரதி, மாநில செயற்குழு உறுப்பினர்கள் க.கனகராஜ், என்.பாண்டி, மக்களவை உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம், சிஐடியு மாநில தலைவர் ஜி.சுகுமாரன், எம்எல்எப் மாநில பொதுச் செயலாளர் அந்தேரி தாஸ் ஆகியோர் பங்கேற்றனர்.
