தஞ்சாவூர் மாவட்டத்துக்கு ரூ.2.92 கோடியில் விளையாட்டு உபகரணங்கள்
தஞ்சாவூர், பிப்.7- திருச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் சார்பில், நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகர ணங்கள் வழங்கும் விழாவை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார். இவ்விழா காணொலி மூலம் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்திலும் ஒளிபரப்பப்பட்டது. இதைத் தொடர்ந்து, தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள 2 மாநக ராட்சிகள், 3 நகராட்சிகள், 19 பேரூராட்சிக ளிலுள்ள 459 வார்டுகளுக்கு தலா ரூ.44 ஆயிரம் மதிப்புள்ள 30 விளையாட்டு உபகரணங்கள் என மொத்தம் ரூ.2.92 கோடி மதிப்பில் 732 தொகுப்புகள் வழங்கும் பணி தொடங்கப்பட்டது.