சிறப்பு ஒலிம்பிக் உலக குளிர்கால விளையாட்டு இந்தியாவிற்கு மேலும் 5 பதக்கங்கள்
இத்தாலி நாட்டின் டூரின் நகரில் சிறப்பு ஒலிம்பிக் உலக குளிர்கால விளையாட்டுப் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் இரண்டாவது நாளில் 2 விளையாட்டுப் பிரிவுகளில் இந்தியா 2 தங்கம், 2 வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கங்களை வென்றது. இதன் மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள் ளது. இந்திய நேரப்படி புதன்கிழமை நள்ளிரவு நோவிஸ் ஸ்லாலோம்பிரிவில் பாரதி (F-25) தங்கப் பதக்கத்தையும், ஹர்ஷிதா தாக்கூர் (பிரிவு F-26) வெண்கலப் பதக்கத்தையும் வென்றார். இது பாரதியின் இரண்டாவது தங்கப்பதக்கமாகும். அதே நேரத்தில் ஹர்ஷிதா தொடக்க நாளில் வெள்ளிப் பதக் கம் வென்றிருந்தார். முதல் நாளில் இந்தியா ஸ்னோபோர் டிங் பிரிவில் 4 பதக்கங்களை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
1.7 கோடி பாலவர்ஸ் சென்னை அணி சாதனை
பிரபல சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் 1.7 கோடி (17 மில்லியன்) பாலவர்ஸ் முதல் ஐபிஎல் அணி என்ற பெருமையை பெற் றது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. சென்னை அணிக்கு அடுத்து பெங்க ளூரு அணி 1.6 கோடி பாலவர்ஸ் உடன் இரண்டாம் இடத்திலும், மும்பை அணி 1.5 கோடி பாலவர்ஸ்களுடன் 3ஆவது இடத்தில் உள்ளது.
வைடு, நோ பாலை நீக்க சொன்னால் கூட ஐசிசி நீக்கும் இந்திய கிரிக்கெட் வாரியமாக செயல்படுகிறது ஐசிசி
சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ஐசிசி) தலைவராக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா மகன் ஜெய் ஷா உள்ளார். ஜெய் ஷா தலைவராக பொறுப்பேற்றப் பின் ஐசிசி-யின் செயல்பாடு மிக மோசமாக இருப்பதாக செய்திகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) போன்று, சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐசிசி) செயல்படுவதாக மேற்கு இந்தியத் தீவுகளின் முன்னாள் வீரர் ஆன்டி ராப்ட்ஸ் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில் ஆன்டி ராப்ட்ஸ் வெளியிட்டுள்ள பதிவில்,”கிரிக்கெட் மூலம் இந்தியாவிற்கு அதிகமான பணம் கிடைக்கிறது. உண்மை தான். அதனால் கிரிக்கெட் ஒரு நாட்டுக்காக மட்டும் இருக்கக் கூடாது. ஒரு தொடரில் ஒரு அணியால் மட்டும் எப்படி எங்குமே (மினி உலகக்கோப்பை - துபாய்) பயணிக்காமல் இருக்க முடியும் என்பது நியாயமானதல்ல. தற்போதைய சூழ்நிலையில் ஐசிசி என்பது பிசிசிஐயாக செயல்படுகிறது. இந்தியாதான் அனைத்தையும் ஆணையிடுகிறது. நாளை வைடு, நோ பாலை நீக்க இந்தியா கூறினால், அடுத்த நாளே ஐசிசி இந்தியாவை திருப்தி செய்ய அதனை நிறைவேற்றும்” என அதில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
போதைப்பொருள் கடத்தல் ஆஸி., முன்னாள் வீரர் ஸ்டூவர்ட் மெக்கில் குற்றவாளி
ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணியின் முன் ்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் மெக்கில் 1998 முதல் 2008ஆம் ஆண்டு வரை 20 ஆண்டுகள் தேசிய அணியின் முக்கிய சுழற் பந்துவீச்சாளராக மிரட்டினார். கணிக்க முடி யாத சுழற்பந்துவீச்சு மூலம் இக்கட்டான சூழ் நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றியை தேடி தந்தவர். இந்நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு கோக்கைன் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டதாக ஸ்டூவர்ட் மெக்கில் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்திய மதிப்பில் ரூ.1 கோடி மதிப்புள்ள கோக்கைன் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விநியோகத்தில் ஸ்டூவர்ட் மெக்கில் முக்கிய பங்காற் றினார் என காவல்துறையினர் சிட்னி நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனர். தொடர்ந்து சிட்னி நீதிமன்றம் வியாழனன்று ஸ்டூவர்ட் மெக்கில் குற்றவாளி என தீர்ப்பு வழங்கியது. எனினும் வியாழக்கிழமை மாலை வரை தண்ட னை விபரம் தொடர்பாக எவ்வித தகவலும் வெளியாகவில்லை.