tamilnadu

டிசம்பர் 27, 28, ஜனவரி 3, 4 வாக்காளர் பட்டியல் திருத்த  சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு!

டிசம்பர் 27, 28, ஜனவரி 3, 4 வாக்காளர் பட்டியல் திருத்த  சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு!

சென்னை, டிச. 23 -  வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் புகைப்படங்கள் புதுப்பித்தல் போன்ற திருத்தங்களை மேற்கொள்வதற்கு சிறப்பு முகாம்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு முழுவதும் உள்ள வாக்குச் சாவடிகளில் டிசம்பர் 27, 28 மற்றும் ஜனவரி 3, 4 ஆகிய தேதி களில் இம்முகாம்கள் நடைபெறும் என்றும், தெரி விக்கப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணி களுக்காக வாக்குச்சாவடி அலுவலர்கள் மூலம் கணக் கீட்டுப் படிவங்கள் வழங்கப்பட்டு, வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த டிசம்பர் 19 அன்று வெளியிடப்பட்டது. புதிதாக பெயர் சேர்க்க படிவம் 6, பெயர் நீக்கம் செய்ய  படிவம் 7, முகவரி மாற்றம் மற்றும் புகைப்பட அடையாள  அட்டை திருத்தங்களுக்கு படிவம் 8 அளிக்கப்பட வேண்டும். இப்படிவங்களுடன் ஓய்வூதிய ஆணை, பிறப்புச் சான்றிதழ், பாஸ்போர்ட், கல்விச் சான்றிதழ்கள், குடியிருப்புச் சான்றிதழ்கள், ஆதார் அட்டை நகல் உள்ளிட்ட வற்றில் ஏதேனும் ஒரு ஆவணத்தை இணைக்க வேண்டும்.  ஜனவரி 18 வரை அனைத்து வேலைநாட்களிலும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் வாக்கா ளர் பதிவு அலுவலகங்களில் நேரடியாகவும் படிவங் களை வழங்கலாம்.