tamilnadu

img

காலில் விழுந்து கும்பிடச் சொல்லி தண்டம் கட்ட வைத்து சமூகப் புறக்கணிப்பு

காலில் விழுந்து கும்பிடச் சொல்லி தண்டம் கட்ட வைத்து சமூகப் புறக்கணிப்பு

கட்டப் பஞ்சாயத்து கும்பல் மீது நடவடிக்கை எடுக்க கோரி எஸ்.பி.யிடம் புகார் மனு

பெரம்பலூர், மே 20-  பெரம்பலூர் அருகே அம்மாபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் காமராஜ் மனைவி ராதிகா, இவர் எஸ்பி அலுவலகத்தில் அளித்துள்ள புகார் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:  எனது கணவர் காமராஜ் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் பொறுப்பில் உள்ளார். ஊராட்சி மன்ற துணைத் தலைவராக இருந்துள்ளார். நான் கடந்த உள்ளாட்சி தேர்தலில் கட்சி சார்பில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டேன். இதனால் எனக்கும் எங்கள் ஊரை சேர்ந்தவர்களான கோவிந்தராஜ் மகன் வெங்கடேஷ் (தர்மகர்த்தா), கருப்பண்ணன் மகன் மார்கண்டன் உள்பட, சிலரிடம் முன்விரோதம் ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த 2025 மார்ச் மாதம் 9 ஆம் தேதி சமயபுரம் பூச்சொரிதல் விழாவில், சாமி ஊர்வலத்தின்போது, எங்கள் தெரு வழியாக எங்கள் வீட்டு முன்பு சாமியை நிறுத்தாமல் சென்றதால் நான் மற்றும் எனது குடும்பத்தினரும் சாமி முன் தரையில் உட்கார்ந்து பூஜை செய்யச் சொல்லி வலியுறுத்திய பின்பு, என்னையும் என் குடும்பத்தாரையும் மாரியம்மன் கோவிலுக்கு வரவழைத்து கட்ட பஞ்சாயத்துப் பேசி எனது மகனுக்கும், எனது குடும்பத்தாருக்கும் ரூ.30 ஆயிரம் தண்டம் விதித்து, இந்த தண்ட தொகையை செலுத்தினால்தான் உன் வீட்டின் முன்பு பூஜை செய்ய முடியும் என தர்மகர்த்தா வெங்கடேஷ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் எனது மகனை கட்டாயப்படுத்தினர். ஆனால், தண்ட தொகையை கட்ட முடியாது என்று சொன்னதற்கு, பொதுமக்கள் முன்னிலையில் காலில் விழுந்து கும்பிட்டால் தண்டத் தொகையை குறைப்பதாக கூறினார். எனது மகனும் வேறு வழி இல்லாததால் 50-க்கும் மேற்பட்ட முறை காலில் விழுந்து கும்பிட்ட பிறகு, இறுதியாக ரூ.7 ஆயிரமாக தண்டத் தொகையை குறைத்தனர். பின்னர் எனது கணவர் காமராஜை மிரட்டி தண்டம் போட முயன்றனர். ஆனால் எனது கணவர் இதனை ஏற்கவில்லை. இந்நிலையில், கடந்த 6 ஆம் தேதி சிறுவாச்சூர் கோவில் திருவிழாவிற்காக சாமி ஊர்வலம் வந்தபோதும் தர்மகத்தா வெங்கடேஷ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் எங்கள் வீட்டு முன் பூஜை பொருட்களை வாங்காமல், எங்களை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்து விட்டதாகக் கூறிவிட்டு சாமி ஊர்வலத்தை எடுத்துச் சென்றனர்.இன்னும் ஒரு மாதத்தில் நடக்க உள்ள ஊர் மாரியம்மன் கோவில் கும்பாபிசேகத்திற்கும் எங்கள் குடும்பத்தை சமூக புறக்கணிப்பு செய்திடவும், கோவில் வரி வாங்காமல் எங்களை பொதுமக்களிடத்தில் அவமானப்படுத்திட முடிவு செய்து உள்ளனர். எனவே, எங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து, காலில் விழவைத்து தண்டம் வாங்கி சமூக புறக்கணிப்பு செய்து கடும் மன உளைச்சலை ஏற்படுத்தி, தற்கொலைக்கு தூண்டும் வகையில் செயல்படும் கட்ட பஞ்சாயத்து கும்பல் மீது, மனித உரிமைகள் மீறும் சட்டப்படியும், கட்டப் பஞ்சாயத்து சட்டப்படியும், தற்கொலைக்கு தூண்டும் சட்டப்படியும், சமூக புறக்கணிப்பு மீறும் சட்டப்படியும் கைது நடவடிக்கை எடுத்து, எங்களது குடும்பத்திற்கு பாதுகாப்பு வழங்கவேண்டும் என தெரிவித்துள்ளார். மனு அளித்தபோது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கலையரசி, ரெங்கநாதன் மற்றும் கட்சி