tamilnadu

img

சமூகநீதியை கங்கையில் மூழ்கடிக்கும் ஐ.ஐ.டி நிறுவனங்கள்! - சு.வெங்கடேசன் எம்.பி

சென்னை மற்றும் வாரணாசி ஐ.ஐ.டிகள், காசி சங்கமத்தில் மட்டுமல்ல, பேராசிரியர்கள் இட ஒதுக்கீடு பாரபட்சத்திலும் இணைந்தே காட்சியளிக்கிறது என்று மதுரை எம்.பி சி.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் மதுரை எம்.பி சு.வெங்கடேசனின் கேள்விக்கு பதிலளித்த ஒன்றிய கல்வித்துறை இணை அமைச்சர் அன்னபூர்ணா தேவி, ஐ.ஐ.டி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் எஸ்.சி.,எஸ்.டி. மற்றும் ஓபிசி பிரிவுகளில் பேராசிரியர் பணியிடங்களில், 70% இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன என்றும், 30% இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், சென்னை மற்றும் வாரணாசி ஐ.ஐ.டிகள், காசி சங்கமத்தில் மட்டுமல்ல, பேராசிரியர்கள் இட ஒதுக்கீடு பாரபட்சத்திலும் இணைந்தே காட்சியளிக்கிறது என்று மதுரை எம்.பி சி.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
இட ஒதுக்கீடு இடங்களில், சென்னையில் 16 இடங்கள் நிலுவையில் உள்ளதாகவும், வாரணாசியில் நிலுவையில் உள்ள இடங்கள் அறிவிக்காமலே இழுவையில் உள்ளதாகவும், சமூகநீதியை கங்கை நீரில் மூழ்கடிக்க சங்கமிக்கும் நிறுவனங்களா இவை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.