ஸ்மார்ட் மீட்டர், தனியார்மயம் வேண்டாம்’ மின் ஊழியர் மத்திய அமைப்பு கருத்தரங்கம்
தனியார் நிறுவனங்கள் ஸ்மார்ட் மீட்டர் வைத்தால் மின் கட்டண வசூல், மின் தடை நீக்குதல், மின் கட்டணம் தீர்மானித்தல் ஆகிய அனைத்தையும் தனியார் நிறு வனங்களே செய்யும். மின் கட்டணம் கடுமை யாக உயரும், விவசாய பம்பு செட்டுகளுக்கு இலவச மின்சாரம், வீடுகளுக்கு 100 யூன்ட் மானியம், சிறு,குறு தொழில்களுக்கு மானி யம் என அனைத்தும் பறிபோகும். மின்சாரம் முற்றிலும் தனியார் மயமாகும். மேலும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு பறிபோகும். எனவே தமிழக அரசு தனியார் நிறுவனங்களுக்கு ஸ்மார்ட் மீட்டர் வைக்க டெண்டர் விடுவதை கைவிட வேண்டும். கேரளாவை போல் ஸ்மார்ட் மீட்டர் வைக்க மின் வாரியத்துக்கு அனுமதி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி “ஸ்மார்ட் மீட்டர், தனியார்மயம் வேண்டாம்” என்ற தலைப்பில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு, தமிழ்நாடு மின்துறை பொறியா ளர் அமைப்பு மற்றும் தமிழ்நாடு மின் துறை ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் செவ்வாயன்று திருச்சியில் திறந்தவெளி கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநில துணைத்தலைவர் ரெங்கராஜன் தலைமை வகித்தார். தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநில பொதுச் செயலாளர் ராஜேந்திரன், பொறி யாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் சம்பத்குமார், எம்ப்ளாயீஸ் பெடரேஷன் மாநில பொதுச் செயலாளர் சேக்கிழார், தொழிலாளர்-பொறியாளர் ஐக்கிய சங்க மாநிலத் தலைவர் கண்ணன், பொறியாளர் கழக நாராயணன், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு திருச்சி மண்டல செய லாளர் அகஸ்டின், திண்டுக்கல் வட்டச் செய லாளர் திருமலைசாமி, புதுக்கோட்டை வட்டச் செயலாளர் நடராஜன் ஆகியோர் சிறப்பு ரையாற்றினர். இதில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு வட்டச் செயலாளர் பழனியாண்டி, ஓய்வு பெற்றோர் நல அமைப்பு பன்னீர் செல்வம், பொறியாளர் கழக வட்டச் செய லாளர் சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்ட னர். முன்னதாக பொறியாளர் கழக மாநில துணைப் பொதுச் செயலாளர் இருதயராஜ் வரவேற்றார். தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு திட்ட தலைவர் நடராஜன் நன்றி கூறினார்.