சென்னை, டிச. 31 - தமிழகத்தில் ஸ்மார்ட் மின் மீட்டர் கொள்முதலுக்கான சர்வதேச டெண்ட ரை, அதானி குழுமம் கைப்பற்றியிருந்த நிலையில், அந்த டெண்டரை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (TANGEDCO) ரத்து செய்துள்ளது. அதானி நிறுவனம் குறிப்பிட்டு இருந்த தொகை மின்வாரிய பட்ஜெட்டுக்கு அதிகமாக இருப்பதால் ரத்து செய்வ தாக டான்ஜெட்கோ தகவல் தெரிவித் துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சி புரம் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு மட்டும் 82 லட்சம் ஸ்மார்ட் மீட்டர்கள் வாங்க டான்ஜெட்கோ சர்வதேச அளவில் டெண்டர் விடுத்திருந்தது. அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் லிமிடெட் உள்பட 4 நிறுவனங்கள் இந்த டெண்டரில் பங்கேற்று இருந்த நிலையில், அந்த 4 நிறுவனங்களிலும் அதானி நிறுவனம் மட்டுமே மிகக் குறை வான தொகையை ஏலத்தில் குறிப் பிட்டிருந்தது. எட்டு மாவட்டங்களை உள்ளடக்கிய ஸ்மார்ட் மீட்டர் டெண்டரின் தொகுப்பு 1-க்கான மிகக் குறைந்த ஏலதாரராக அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் லிமி டெட் (AESL) உருவெடுத்தது. எனினும் தமிழக அரசு நிர்ணயித்து இருந்த தொகையை விட அதானி நிறுவனம் குறிப்பிட்டிருந்த தொகை அதிகமாக இருப்பதால், அந்த டெண்டரை ரத்து செய்ததாக டான்ஜெட்கோ தெரி வித்துள்ளது. அதானி நிறுவனம் குறிப்பிட்டிருந்த தொகை அதிகமாக இருந்ததால், அதனைக் குறைக்க ஏலதாரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், ஆனால், குறிப்பிடப்பட்ட விலை ஏற்கத் தக்கதாக இல்லாததால், டெண்டர் ரத்து செய்யப்பட்டது. விரைவில் மறு ஒப்பந்தப்புள்ளி கோரப்படும் என்று கூறியிருக்கும் தமிழக மின்சார வாரியம் மற்ற மூன்று நிறுவனங்களுக்கும் விடப் பட்ட டெண்டர்களும் நிர்வாக காரணங் களால் ரத்து செய்யப்பட்டதாக கூறியுள்ளது.