tamilnadu

img

ஓசூர் தனியார் காப்பகத்தில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை!

ஓசூர் தனியார் காப்பகத்தில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை!

காப்பகம், பள்ளிக் கூடம் நிரந்தரமாக மூடல்

கிருஷ்ணகிரி, செப்.26- ஓசூர் பகுதியில் தனியார் காப்பகத்தில் தங்கிப் படித்து வந்த சிறுமிகளை பாலியல் துன்புறுத்தல் செய்த பள்ளி தாளாளர் சாம் கணேஷ் உட்பட மேலும் 4 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். மேலும், அந்த காப்பகம் மற்றும் பள்ளிக்கூடம் நிரந்தரமாக மூடப்பட்டது. ஓசூர் மாநகராட்சி தின்னூர் அருகே லட்சுமி நரசிம்மா நகரில் பெஸ்சோ என்ற ஆதரவற்ற குழந்தை கள் இல்லத்தில் 26 சிறு வர், சிறுமிகள் தங்கி படித்து வந்தனர். கடந்த 8 நாட்க ளுக்கு முன்பு 4 ஆம் வகுப்பு படிக்கும் 9 வயது சிறுமிக்கு உடல் நலம் பாதித்த நிலை யில், பரிசோதித்த மருத்து வர் சிறுமி பாலியல் தொல்லைக்கு ஆளான தாக தெரிவித்தார். இதை யடுத்து, பெற்றோர் புகார் அளித்ததன் பேரில் விசார ணையில் அங்குள்ள பள்ளி தாளாளர் சாம் கணேஷ் 63 வயது அந்த சிறுமியை பாலியல் வல்லுறவு செய்ததாக தெரியவந்து போக்சோ சட்டத்தில் செப்.21 ஆம் தேதி அவர் கைது செய்யப்பட்டார். தொடர் விசாரணை செய்யப்பட்டதில் அதை மூடி மறைக்க முயற்சித்த அவர் மனைவி ஜோஸ்பின், பெற்றோர்களுடன் கட்டப்பஞ்சாயத்து செய்து மறைக்க முயன்ற நாதா முரளி, செல்வராஜ், இந்திரா இரு நாட்கள் முன்பு கைது செய்யப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து அந்த காப்பகத்தில் தங்கி யிருந்த 9 சிறுமிகள், 17 சிறுவர்கள், மொத்தம் 26 பேர் கிருஷ்ணகிரி மற்றும் பர்கூரில் உள்ள சிறுவர் காப்பகங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மேலும் ஓசூர் லட்சுமி நரசிம்மா நகரில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் இல்லம் மற்றும் அங்கு செயல்பட்டு வந்த பள்ளிக்கூடம் நிரந்தரமாக மூடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து அங்கிருந்த வேறு மாணவிகள் யாரும் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டுள்ளார்களா என காவல்துறையினர் தொடர் விசாரணை நடத்திய தில் மேலும் 3 மாணவிகள் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக மேலும் யாருக்காவது தொடர்பு உள்ளதா என மேல் விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது என்று காவல்துறையினர் தெரி வித்துள்ளனர். காப்பகத்தில் தங்கிப் படித்த சிறு வயது மாணவிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளதை கண்டித்து சிபிஎம் சார்பில் ஓசூர் மாநகர் காந்தி சிலை முன்பு மாநகர செய லாளர் நாகேஷ்பாபு தலை மையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மகாலிங்கம், ஜேம்ஸ் ஆஞ்சால மேரி, மாவட்டக் குழு உறுப்பினர் ஸ்ரீதர், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் ஆனந்தகுமார், விவசாயிகள் சங்க நிர்வாகி திம்மாரெட்டி ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் முருகேசன், ஒன்றியச் செய லாளர் முனிராஜ், மாதர் சங்க மாநகரத் தலைவர் வள்ளி, மாநகர, ஒன்றிய குழு உறுப்பினர்கள் பி.ஜி. மூர்த்தி, எம்.எம்.ராஜு, சீனிவாசன், ரவி, சீனி வாசரெட்டி, அந்தோணிசாமி கலந்து கொண்டனர்.