உணவு உற்பத்தியில் தன்னிறைவு - புர்கினா பாசோ அறிவிப்பு
ஒவாகடூகு,ஜன.5- புர்கினா பாசோ உணவு உற்பத்தி யில் தன்னிறைவு அடைந்து விட்டதாக அந்நாட்டின் இடைக்கால ஜனாதி பதி கேப்டன் இப்ராஹிம் தரோர் அறி வித்துள்ளார். 2025 டிசம்பர் 31 வருடத்தின் இறுதி நாளில் அவர் பேசிய போது, 2025 இல் நாட்டின் பாதுகாப்பு நிலை மேம் பட்டுள்ளது.மேலும் நமது நாடு உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்துள்ளது என பெருமையுடன் குறிப்பிட்டார். பிரான்ஸ் ஏகாதிபத்தியத்திற்கு ஆதரவான ஆட்சியை அகற்றி விட்டு 2022 முதல் புர்கினா பாசோவில் ராணுவத்தின் தலைமையிலான இடைக்கால ஆட்சி நடைபெற்று வரு கிறது. ஆப்பிரிக்க நாடுகளின் அமைதி யை குலைப்பதற்காக அமெரிக்கா, பிரான்ஸ், இஸ்ரேல், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளால் பயங்கரவாதக் குழுக்கள் வளர்த்து விடப்பட்டுள்ளன. இந்த குழுக்கள் ஏகாதிபத்தி யத்திற்கு எதிரான ஆப்பிரிக்க நாடு களின் மீது தொடர் தாக்குதல் நடத்து வதுடன் பல நகரங்களை ஆக்கிர மித்து வருகின்றன. புர்கினா பாசோ வும் கடும் பாதிப்புகளை சந்தித்து வருகிறது. இச்சூழலில் ‘ஆபரேஷன் லால்மாஸ்கா’ (Operation Lalmas sga) என்ற ராணுவ நடவடிக்கையின் மூலம், பயங்கரவாதிகளின் பிடியில் இருந்த பல நகரங்களை ராணுவம் மீட்டுள்ளது. விவசாயத்தில் சாதனை 2023 ஆம் ஆண்டு ஆப்பிரிக்கா-ரஷ்யா உச்சி மாநாட்டிற்கு சென்றி ருந்த பொது உரையாற்றிய இப்ரா ஹிம் ஆறு ஆப்பிரிக்க நாடுகளுக்கு இலவசமாக தானியங்களை அனுப்பு வதாக ரஷ்ய ஜனாதிபதி புடின் அறி வித்ததைப் பாராட்டினார். அத்துடன் ஆப்பிரிக்க நாடுகள் உணவுத் தன்னி றைவை அடைய வேண்டும் எனவும் வலியுறுத்தினார். அது மட்டுமல்ல “அடுத்த மாநாட்டிற்கு வரும்போது, நமது மக்களுக்கு உணவுத் தன்னி றைவை உறுதி செய்யாமல் நாம் இங்கு வரக்கூடாது,” என்று அவர் உறுதியாகக் கூறிவிட்டு வந்தார். அந்த வாக்குறுதியை தனது நாட்டு மக்கள் மற்றும் இளைஞர்களின் உதவி யுடன் 2025 இல் நிறைவேற்றியுள்ளார். சத்து மிகுந்த விதைகள், அரசு மானி யங்கள் மற்றும் இயந்திரமயமாக் கப்பட்ட விவசாயம் ஆகியவற்றை முன் னெடுத்ததன் மூலமாக புர்கினா பாசோ இப்போது தனக்குத் தேவை யான உணவைத் தானே உற்பத்தி செய் யும் நிலையை எட்டியுள்ளது. இனி 2026 இல் நீர் சேமிப்புத் திட்டங்கள், மீன் வளர்ப்பு மற்றும் கால்நடைத் தீவன உற்பத்தி ஆகியவற்றை மேம்படுத்த அந்நாடு திட்டமிடப்பட்டுள்ளது.
ஆட்சிக் கவிழ்ப்பு சதி முறியடிப்பு இப்ராஹிம் தரோரை
படுகொலை செய்யவும் அந்நாட்டில் மீண்டும் ஆட்சிக்கவிழ்ப்பை நடத்தவும் மேற்குலக நாடுகள் தொடர்ந்து சதி வேலை செய்து வருகின்றன. இந்நிலையில் சமீபத்தில் மீண்டும் ஒரு ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி நடந்துள்ளது. முன்னாள் இடைக்கால ஜனாதிபதி பால்-ஹென்றி டமிபா உள்ளிட்ட வர்கள் அண்டை நாடான டோகோவின் லோமே நகரிலிருந்து சதித்திட்டம் தீட்டிய நிலையில் அதனை ஜனவரி 3 புர்கினா பாசோ ராணுவம் முறியடித்து விட்டது. இத்தகவல் வெளியானவுடன் ஜனாதிபதி கேப்டன் இப்ராஹிமைப் பாதுகாக்க ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் தலைநகர் ஒவாகடூகு உள்ள ஜனாதிபதி மாளி கைக்கு அருகே பொதுமக்கள் திரண்டு விட்டனர். சதி வேலையில் ஈடுபட்ட நபர்களை கைது செய்தது அல்லது உயிரிழப்புகள் தொ டர்பான செய்திகள் வெளியாகவில்லை. விசாரணை தொடர்ந்து வரும் நிலையில் அந்நாட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.