tamilnadu

img

முதல்வர் மு.க. ஸ்டாலின், இரா. முத்தரசன் வாழ்த்து

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள பெ. சண்முகம், செவ்வாயன்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது, அதேநிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக முதலமைச்சர் பெ. சண்முகத்திற்கு தமது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், சிபிஎம் மாநிலக்குழு அலுவலகத்தில் பெ. சண்முகத்தை நேரில் சந்தித்து வாழ்த்துக்களைத் தெரிவித்தார். அப்போது, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.