சென்னை, ஜூலை 16- நீட் மதிப்பெண்களின் அடிப்படை யில், இட ஒதுக்கீட்டின் படி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அரசு ஒதுக்கீடு, நிர்வாக பிரிவு ஒதுக்கீடு, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 2023-24ஆம் கல்வி ஆண்டிற்கான இளநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்பில் சேர்வதற்கு தகுதி பெற்ற மாணவ, மாணவிகளின் தர வரிசை பட்டியலை தமிழ்நாடு மருத்து வம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளி யிட்டார். இதில் அரசுப் பள்ளி மாணவர் களுக்கான ஒதுக்கீட்டில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி கிருத்திகா 569 மதிப்பெண்களுடன் முத லிடம் பிடித்துள்ளார்.
மருத்துவம் மற்றும் பல் மருத்து வம் ஆகிய படிப்புகளுக்கான அரசு மருத்துவ இடங்கள், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு மருத்துவ இடங்கள், சுயநிதி மருத்துவப் கல்லூரி களில் உள்ள நிர்வாக மருத்துவ இடங்க ளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் ஜூன் 28ஆம் தேதி முதல் பெறப்பட்டு ஜூலை 12ஆம் தேதி விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க இறுதி நாளாக அறிவிக்கப்பட்டது. மொத்தம் 40,200 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள் ளன. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 3,994 அதிகம். இதில் 7.5 விழுக்காடு அரசு பள்ளி மாணவர்களின் உள் ஒதுக்கீட் டிற்கு 3,042 விண்ணப்பங்களும், விளை யாட்டு பிரிவுக்கு 179 விண்ணப்பங்க ளும், முன்னாள் படைவீரர் பிரிவு ஒதுக்கீட்டிற்கு 401 விண்ணப்பங்களும் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஒதுக் கீட்டு பிரிவுக்கு 98 விண்ணப்பங்களும் பெறப்பட்டன. பெறப்பட்ட விண்ணப்பங்களை பரி சீலனை செய்து மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் படிப்புகளுக்கான தர வரிசைப் பட்டியலும் மற்றும் 7.5 விழுக்காடு அரசு பள்ளி மாண வர்களின் உள் ஒதுக்கீட்டுக்கான பட்டி யலும் ஞாயிறன்று (ஜூலை 16) வெளி யிடப்பட்டது. இந்த தரவரிசைப் பட்டி யலில் அரசுப் பள்ளி மாணவர்கள் ஒதுக் கீட்டில், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி கிருத்திகா 569 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தைப் பிடித்துள் ளார். தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் பச்சையப்பன் 565 மதிப் பெண்களுடன் 2ஆவது இடத்தைப் பிடி த்துள்ளார். பொது கலந்தாய்வில் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவன் பிரபஞ்சன் 720க்கு 720 மதிப் பெண்ணுடன் முதலிடத்தை பிடித் துள்ளார்.