tamilnadu

img

மதுரையில் நாளை சங்கமிக்கும் தியாகச் சுடர்கள்

மதுரையில் நாளை சங்கமிக்கும் தியாகச் சுடர்கள்

சிபிஎம் அகில இந்திய 24 ஆவது மாநாடு

சிங்காரவேலர் நினைவுச் சுடர் சென்னையிலிருந்து புறப்பட்டது

ர்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய 24-ஆவது மாநாடு, தோழர் பி. ராம மூர்த்தி நினைவு வளாகத்தில் (மதுரை தமுக்கம்  மைதானம்) ஏப்ரல் 2 முதல் 6 ஆம் தேதி வரை  நடைபெறுகிறது. முன்னதாக, மாநாட்டிற்கு தமிழ்நாட்டின் 5  முனைகளிலிருந்து எடுத்து வரப்படும் தியாகி கள் நினைவுச் சுடர்கள், ஏப்ரல் 1 அன்று மாலையே மதுரையில் சங்கமம் ஆகின்றன. ம.சிங்காரவேலர் நினைவுச் சுடர் இதில், தென்னிந்தியாவின் முதல்  கம்யூனிஸ்டும், இந்தியாவில் முதன்முதலில்  செங்கொடி ஏற்றி மே தினம் கொண்டாடியவரு மான ‘சிந்தனைச் சிற்பி’ தோழர் ம.சிங்கார வேலர் நினைவுச் சுடர், சென்னையிலிருந்து ஞாயிறன்று புறப்பட்டது.  சென்னை ராயபுரம் கல்மண்டபம் சாலையில்  உள்ள சிங்காரவேலர் மணி மண்டபத்தில் இருந்து அவரது நினைவுச் சுடரை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் டி.கே. ரங்கராஜன் எடுத்துக் கொடுத்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற் குழு உறுப்பினர் கே. பாலபாரதி தலைமை யில் மாநிலக்குழு உறுப்பினர்கள் எஸ். வாலண் டினா, எஸ்.நம்புராஜன், எஸ். ராஜேந்திரன் ஆகி யோர் தலைமையிலான குழுவினர், தியாகிகள்  சுடரை ஏந்தியபடி அகில இந்திய மாநாடு நடை பெறும் மதுரையை நோக்கிப் பயணத்தைத் துவங்கினர்.

முன்னதாக சுடர்ப்பயண நிகழ்ச்சிக்கு, ராய புரம் பகுதிச் செயலாளர் எஸ். பவானி தலைமை  வகித்தார். டி.வெங்கட் வரவேற்றார். வரவேற்புக்  குழுத் தலைவர் எஸ்.கே. மகேந்திரன், மாநிலக் குழு உறுப்பினர் எல். சுந்தரராஜன், மாவட்டச் செயலாளர் எம். ராமகிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பாரதி  கலைக்குழுவின் கலைநிகழ்ச்சிகள் நடை பெற்றன. ம. சிங்காரவேலர் நினைவுச் சுடருக்கு  சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் மலர் தூவியும், பட்டாசு வெடித்தும், குழுவினருக்கு நீர்-மோர், குளிர் பானங்கள் வழங்கியும் உற்சாக  வரவேற்பு அளிக்கப்பட்டது.

வெண்மணித் தியாகிகள் நினைவுக்கொடி அரைப்படி நெல் கூலி உயர்வு கேட்டு  போராடியதற்காகவும், அந்தப் போராட்டத்தின் போது, தங்களின் பண்ணை அடிமை விலங் கொடித்து, சுயமரியாதை மிக்க மனிதர்களாக ஆக்கிய செங்கொடியை கீழே இறக்க மாட் டோம் என்று துணிந்து நின்றதற்காகவும் ஆண்டைகள் வைத்த நெருப்பில் குழந்தை கள், பெண்கள், முதியவர்கள் உள்ளிட்ட வெண் மணித் தியாகிகள் 44 பேர் வெந்து மடிந்தனர். அந்த வெண்மணித் தியாகிகள் நினைவாக எடுத்து வரப்படும் செங்கொடி
, சிபிஎம் அகில இந்திய 24-ஆவது மாநாட்டில் ஏற்றப்பட உள்ள  நிலையில், அந்த கொடிப்பயணமும் மதுரையை  நோக்கி தனது பயணத்தைத் துவங்கியது. நாகப்பட்டினம் மாவட்டம் வெண்மணி தியாகிகள் பூமியிலிருந்து கட்சியின் அரசியல்  தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராம கிருஷ்ணன் எடுத்துக் கொடுத்த செங்கொடியை  ஏந்தியபடி, மத்தியக்குழு உறுப்பினர் உ.  வாசுகி தலைமையில் மாநிலக்குழு உறுப்பினர் எம். ஜெயசீலன், சாமி. நடராஜன் மற்றும் எஸ்.  தமிழ்ச்செல்வி (தஞ்சாவூர்) ஆகியோர் மதுரை  நோக்கிப் புறப்பட்டனர். முன்னதாக நிகழ்ச்சிக்கு கட்சியின் சட்டமன்றக் குழுத் தலை வர் வி.பி. நாகைமாலி தலைமை தாங்கினார். கட்சியின் நாகப்பட்டினம் மாவட்டச் செயலாளர் வி.மாரிமுத்து வரவேற்றுப் பேசினார். புதுச்சேரி சப்தர் ஹஷ்மி கலைக்குழுவின் கலை  நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. வெண்மணி தியாகிகள் நினைவுக்கொடி பயணத்தைத் துவங்கிய வழிநெடுகிலும் உற்சாக  வரவேற்பு அளிக்கப்பட்டது.

இன்று தியாகிகள் நினைவாக  3 இடங்களில் இருந்து சுடர்கள் புறப்படுகின்றன

ம.சிங்காரவேலர் நினைவுச் சுடர், வெண்மணித் தியாகிகள் நினைவுக் கொடி ஆகியவை பயணத்தைத் துவங்கிவிட்ட நிலை யில், மார்ச் 31 அன்று சேலம் சிறைத் தியாகிகள் நினைவுச்சுடர், கோவை சின்னியம்பாளையம் தியாகிகள் நினைவுச் சுடர், மாணவத் தியாகிகள்  சோமசுந்தரம் - செம்புலிங்கம் நினைவுச் சுடர்  ஆகியனவும் ஏப்.1 அன்று  மதுரைத் தியாகிகள்  நினைவுச்சுடரும் மதுரையை நோக்கி பய ணத்தைத் துவங்க உள்ளன. சேலம் சிறைத் தியாகிகள்  நினைவுச் சுடர் சேலம் சிறைத் தியாகிகள் நினைவுச் சுடரை, மூத்தத் தலைவர் ஆர். சிங்காரவேலு எடுத்துக் கொடுக்க, மாநிலக்குழு உறுப்பினர்கள் பி. டில்லி பாபு தலைமையில், மாநிலக்குழு உறுப்பினர் கள் வீ. அமிர்தலிங்கம், ஏ.குமார், ஜி.ராணி ஆகி யோர் மதுரைக்கு எடுத்து வருகின்றனர். கோவை சின்னியம்பாளையம் நினைவுச் சுடர் கோவை சின்னியம்பாளையம் தியாகிகள் நினைவுச் சுடரை மூத்த தலைவர் பி.ஆர். நட ராஜன் எடுத்துக் கொடுக்க, மாநிலக்குழு உறுப்பி னர் சி. பத்மநாபன் தலைமையில், மாநிலக்குழு  உறுப்பினர்கள் அ. ராதிகா, ஏ.வி. சிங்காரவே லன் மற்றும் ரங்கராஜன் (திருப்பூர்) ஆகியோர் மதுரைக்கு எடுத்து வருகின்றனர். தியாகிகள் சோமு - செம்பு  நினைவுச் சுடர் தூத்துக்குடியிலிருந்து மாணவத் தியாகிகள் சோமு - செம்பு  நினைவுச் சுடரை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பி னர் பி. சம்பத் எடுத்துக் கொடுக்க, கோ. அரவிந்த சாமி தலைமையில், மாநிலக்குழு உறுப்பினர் கள் கே.ஜி. பாஸ்கரன், சம்சீர் அகமது மற்றும் மிருதுளா ஆகியோர் எடுத்து வருகின்றனர். மதுரைத் தியாகிகள் நினைவுச் சுடர் மதுரையின் அனைத்துத் தியாகிகள் நினை வாகவும் சுடர் பயணம் தியாகி லீலாவதி நினைவு  மண்டபத்திலிருந்து ஏப்.1 அன்று காலை  புறப்படுகிறது. கட்சியின் மூத்தத் தலைவர் எஸ்.ஏ. பெருமாள் சுடரை எடுத்துக் கொடுக்க, மாநிலக் குழு உறுப்பினர்கள் இரா.விஜயராஜன், எஸ்.கே. பொன்னுத்தாய் ஆகியோர் தலைமையில் ஏந்திச் செல்கின்றனர். அனைத்து சுடர்ப் பயணக் குழுக்களும் ஏப்ரல் 1 அன்று மாலை 6 மணி அளவில் மதுரை யில் தோழர் பி.ராமமூர்த்தி நினைவு வளாகத்தை  (தமுக்கம் மைதானம்) மாநாட்டு திடலை வந்த டைய உள்ளன.

வெண்மணி தியாகிகள் நினைவக பாதுகாவலர் ரூ. 5000 நிதி

மதுரையில் நடைபெறும் வரும் அகில இந்திய மாநாட்டிற்கான தொடக்க கொடிப் பயண நிகழ்வு கீழ்வெண்மணி தியாகிகள் நினைவிடத்தில் நடைபெற்றது. அப்போது, கீழ்வெண்மணி தியாகிகள் நினைவிடத்தை பாதுகாத்து வரும் சேதுபதி, அகில இந்திய மாநாட்டிற்கான நிதியாக ரூ. 5 ஆயிரத்தை, அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணனிடம் வழங்கினார். சேதுபதி, கீழ்வெண்மணி நிகழ்வில் எரிக்கப்பட்ட குடிசை வீட்டுக்கு சொந்தக்காரரான ராமையாவின் இளைய சகோதரர் ஆவார். தமது அண்ணன் ராமையா உட்பட மூவர் கண் முன்பே எரித்துக் கொல்லப்பட்டதை நேரில் கண்டவர். இன்றும் அவற்றை நினைவுகூரும் சேதுபதி, வெண்மணி நினைவகம், சிஐடியு சார்பில் கட்டப்பட்டு வரும் நினைவகம், ஸ்தூபி, தியாகிகள் திடல் அனைத்தையும் ஒரு காவலாளியாக இருந்து பாதுகாத்து வருகிறார்.