பொங்கல் திருநாளன்று விண்வெளி மைய தேர்வு தேர்வுத் தேதியை மாற்றக் கோரி ஒன்றிய அமைச்சருக்கு சு. வெங்கடேசன் எம்.பி., கடிதம்
மதுரை, ஜன.6 - பொங்கல் திருநாளான ஜன. 15 அன்று நடைபெற உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத் தேர்வை, வேறு தேதிக்கு மாற்ற வேண்டுமென மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வலி யுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் ஒன்றிய அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது: திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் (VSSC), தொழில்நுட்ப உதவி யாளர் பணியிடங்களுக்கான (விளம்பர எண்கள்: 331, 332, 335) கணினி வழித் தேர்வை (CBT) 2026 ஜனவரி 15 அன்று நடத்தத் திட்டமிட்டுள்ளது. ஜனவரி 15 என்பது தமிழகத்தின் மிக முக்கிய திருவிழாவான பொங்கல் திருநாளாகும். தமிழ கத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தேர்வர் களுக்குப் பின்வரும் காரணங்களால் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்: 1. போக்குவரத்துத் தட்டுப்பாடு: பொங்கல் திரு விழா காலத்தில் தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து மற்றும் ரயில் போக்குவரத்து மிகக் கடுமையான நெரி சலைக் கொண்டிருக்கும். இதனால் மாணவர்கள் சரியான நேரத்தில் தேர்வு மையங்களை அடைவது சாத்தியமற்றது. 2. கலாச்சார உணர்வு: பொங்கல் என்பது அறு வடைத் திருவிழா மட்டுமல்ல; அது தமிழர்களின் பண்பாட்டு அடையாளம். இந்த நாளில் தேர்வு நடத்துவது மாணவர்களின் கலாச்சார உரிமை யைப் பறிப்பதாகும். 3. முரண்பாடான நடைமுறை: தமிழகத்தில் உள்ள மகேந்திரகிரி இஸ்ரோ மையம் (IPRC) பொங்கலுக்கு விடுமுறை அளித்துள்ள நிலையில், மற்றொரு மையமான வி.எஸ்.எஸ்.சி தேர்வை அறி வித்திருப்பது நிர்வாக முரண்பாட்டைக் காட்டுகிறது. ஒன்றிய அரசின் பணியாளர் தேர்வாணையம் மற்றும் பிற பொதுத்துறை நிறுவனங்கள் பண்டிகை களைக் கருத்தில் கொண்டு தேர்வுத் தேதிகளை மாற்றி அமைப்பது வழக்கம். எனவே, தமிழக மாண வர்களின் நலன் மற்றும் நியாயமான கோரிக்கை யைக் கருத்தில் கொண்டு, ஜனவரி 15 அன்று நடை பெறவுள்ள இத்தேர்வை மற்றொரு தேதிக்குத் தள்ளி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
