tamilnadu

img

ருவாரூர் ஆட்சியர் முகாமிட்டு கள ஆய்வு

திருவாரூர் ஆட்சியர் முகாமிட்டு கள ஆய்வு

உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டம்

திருத்துறைப்பூண்டி, மே 23-  திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டத்திற்குட்பட்ட பகுதியில், முதலமைச்சரின் உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வ.மோகனச்சந்திரன் முகாமிட்டு கள ஆய்வு மேற்கொண்டார்.  அதனடிப்படையில், மாவட்ட ஆட்சியர், திருத்துறைப்பூண்டி வட்டத்திற்குட்பட்ட பகுதியில் முகாமிட்டு, திருத்துறைப்பூண்டி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் ரூ.8.5 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுவரும் பேரறிஞர் அண்ணா பேருந்து நிலைய கட்டுமான பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து, திருத்துறைப்பூண்டி தினசரி காய்கறி அங்காடி வளாகத்தில் காய்கறிகள் தரம் குறித்து வியாபாரிகளிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வில், திருத்துறைப்பூண்டி நகர்மன்றத் தலைவர் கவிதா பாண்டியன், நகராட்சி ஆணையர் தூர்கா, வட்டாட்சியர் பரமேஸ்வரி, வட்டார வளர்ச்சி அலுவலர் தெய்வநாயகி, உதவி பொறியாளர் சாந்தி, உள்ளிட்ட அனைத்து துறை அரசு உயர் அலுவலர்களும், திருத்துறைப்பூண்டி வட்டத்திற்குட்பட்ட பகுதியில் முகாமிட்டு, மக்களிடம் நேரில் சென்று குறைகளை கேட்டறிந்தனர்.