tamilnadu

img

திருப்பத்தூர் காக்கணாம் பாளையத்தில் ஆர்ப்பாட்டம்

திருப்பத்தூர் காக்கணாம் பாளையத்தில் ஆர்ப்பாட்டம்

திருப்பத்தூர், மே 23 –  திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், காக்கனாம்பாளையம் ஊராட்சி மன்ற நிர்வாகத்தைக் கண்டித்து ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கிளைச் செயலாளர் வி.சிங்காரம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் பி.காத்தவராயன், கே.சாமி நாதன், தாலுகாச் செயலாளர் எஸ்.காமராஜ்,  தாலுகா குழு உறுப்பினர்கள் சி.கேசவன், ரங்கன், ஆர்.ஆனந்தன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். குடிநீர்பிரச்சனை தீர்வு சுண்ணாம்பு காளை பேருந்து நிறுத்தம் அருகே உள்ள டேங்க் மற்றும் ஆழ்துளைக் கிணற்றைச் சுற்றிலும் தேங்கும் கழிவு நீரால் குடிநீர் மாசுபடுவதைச்சரி செய்ய வேண்டும். உடைந்த சிமெண்ட் காரையை யும் சரிசெய்ய வேண்டும்.  அருந்ததியர் குடியிருப்பு வசதிகள் அருந்ததியர் குடியிருப்பு நீண்டகால மாக செயலிழந்துள்ள மினிடேங்க், ஆழ் துளைக் கிணற்றை சரிசெய்து அப்பகுதி மக்க ளின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டும். சாலை வசதி ராஜபாளையத்திலிருந்து அருந்ததியர் குடியிருப்பு செல்லும் பாதையை அகலப்படுத்திதார் சாலையாக மாற்றி அமைக்க வேண்டும். பொஜ்ஜி வட்டம், வீரா சாமி வட்டம் செல்லும் வழியில் கால்வாய் நீர் செல்ல சிமெண்ட் பைப் பொருத்த வேண்டும்.சுடுகாடுவசதி, சங்கம் பாளையம் பகுதியில் சுடுகாடு சுற்றுச்சுவர், எரி மேடை அமைத்துக் கொடுக்க வேண்டும். ஆர்ப் பாட்டம் முடிந்த பின்னர் ஊராட்சி மன்றத் தலைவரிடம் மனு கொடுத்தனர்.