ராணிப்பேட்டையில் ஒப்பந்த தொழிலாளர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டம்
ராணிப்பேட்டை, மே 23 – உணவு மற்றும் ஊதிய உயர்வு கோரிக்கைகளை முன்வைத்து ஒப்பந்த தொழிலாளர்கள் வியாழன்று (மே 23) மாலை முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ராணிப்பேட்டைகோரமண்டல் முரு கப்பா குழுமம் நிறுவனத்தில் பூச்சிக் கொல்லி மருந்து மற்றும் உரம்உற்பத்தி செய்யப்படு கிறது. இங்கு சுமார் 250 ஒப்பந்த தொழிலா ளர்கள் பணியாற்றி வருகின்றனர். நிரந்தர தொழிலாளர்களும் ஒப்பந்த தொழிலாளர் களுக்கு தனித்தனியாக உணவு வழங்கப்படு வதாகவும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மட்டும் தரம் குறைவான உணவு வழங்க ப்படுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. வியாழன்று (மே 22) நிறுவன வாயில் முன்பு ஒப்பந்ததொழிலாளர்கள் ஒன்று திரண்டு தரமான உணவு வழங்க வேண்டும், ஊதிய உயர்வுவழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட் டனர். வெள்ளிக்கிழமை (மே 23) காலை நிர்வாகம் ஒப்பந்த தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.