அறிவியல் இயக்க குறும்பட பயிற்சி முகாம்
சென்னை, மே 23 — தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வட சென்னை மாவட்டம் யூத் பார் சயின்ஸ் நடத்தும் மாநில அளவிலான சமூக ஊட கம் மற்றும் குறும்பட பயிற்சி முகாம் மே 20 முதல் 22 வரை அயன்புரம் நிர்மல் பள்ளி யில் நடைபெற்றது. பயிற்சி முகாமில் வடசென்னை மாவட்ட செயலாளர் அரவிந்த் தலைமையேற்றார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில தலை வர் திருநாவுக்கரசு துவக்க உரையாற் றினார். மாநில பொறுப்பாளர் சுதாகர் மற்றும் மாநிலச் செயற்குழு உறுப்பினர் தேவதாஸ் ஆகியோர் முகாமை வாழ்த்தி பேசினர். இம்முகாமில் 16 மாவட்டங்களிலிருந்து 30 இளம் இயக்குநர்கள் பங்கேற்றனர். யூத் பார் சயின்ஸ் ஒருங்கிணைப்பாளர் ராம மூர்த்தி பயிற்சியின் நோக்கங்களை விளக்கி னார். குறும்படங்கள் உருவாக்கம் மற்றும் தொழில்நுட்பம் குறித்து இயக்குநர் கு.அருண்பகத் கருத்துரையாற்றி, ‘தி டைம் புரோப்பெல்டு’ குறும்பத்தின் போஸ்டரை இணையத்தில் வெளியிட்டார். இம்முகாமில் எடிட்டர் ரவிசங்கர், சதீஷ் (டைலாக் தமிழ்), சிபி கனகராஜ் (ஏஐ), மாநில பொதுச் செய லாளர் எம்.எஸ். முகமது பாதுசா, மேனாள் பொதுச்செயலாளர் சுப்பிரமணி, திருச்சி மாவட்டச் செயலாளர் மு. மணிகண்டன், ஊடகவியலாளர்கள் நர்மதாதேவி, தமிழரசி, ரவிசங்கர், அசோக் குமார், சங்கீத் குகன், சமூக ஊடகவியலாளர் ஆனந்த்கா ஸ்ட்ரோ, ராம்குமார், மாநில துணைத்தலை வர் மரு. அனுரத்னா, மாநிலச் செயற்குழு உறுப்பினர் மோசஸ்பிரபு ஆகியோர் கருத்து ரையாற்றினர். நிகழ்ச்சி நிறைவில் மாவட்டக் குழு உறுப்பினர் லீலாராஜ் நன்றி தெரி