உக்ரைன் மறுகட்டமைப்புக்கு ரஷ்யாவின் சொத்துக்கள்
உக்ரைன் - ரஷ்யா போர் துவங்கிய பிறகு 300 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான ரஷ்யச் சொத்துக்களை அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் முடக்கின. அப்பணத்தை கொள்ளையடித்து உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்க ஐரோப்பா தீவிரம் காட்டியது. இந்நிலையில் அந்த முடக்கப்பட்ட சொத்துக்களில் இருந்து டிரம்ப்பின் காசா அமைதி வாரியத்திற்கு 1 பில்லியன் டாலர்களும் மீதமுள்ள பணத்தை உக்ரைன் - ரஷ்யா போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டிய பிறகு உக்ரைன் மறுக்கட்டமைப்புக்கு பயன்படுத்தப்படலாம் என புடின் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பா சரியான திசையில் செல்லவில்லை : டிரம்ப் விமர்சனம்
ஐரோப்பா தற்போது சரியான திசையில் செல்லவில்லை, மிகவும் எதிர்மறையான விதத்தில் அடையாளம் காண முடியாத நிலைக்கு மாறிவிட்டது என உலகப் பொருளாதார மன்றத்தில் பேசிய போது டிரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார். ஐரோப்பாவின் மீது அன்பு இருக்கிறது.அவர்கள் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்று விரும்புகிறேன் எனவும் அவர் கூறியுள்ளார். கிரீன்லாந்தை ஆக்கிரமிக்க வேண்டும் என்ற டிரம்ப்பின் நிலைப்பாடு காரணமாக டிரம்புக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையே முரண்பாடு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
