tamilnadu

img

டாலருக்கு நிகரான ரூபாய் வரலாறு காணாத வீழ்ச்சி

டாலருக்கு நிகரான ரூபாய் வரலாறு காணாத வீழ்ச்சி

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் 76 பைசா சரிந்து, வரலாறு காணாத வகையில் 91.73 ரூபாயாக வீழ்ந்துள்ளது.  பாஜகவின் மோசமான பொருளாதார மற்றும்  வெளியுறவுக்கொள்கை,  சர்வ தேசச் சந்தையில் நிலவும் நிச்சயமற்ற சூழல்,  தொடர்ந்து வெளியேறும் அந்நிய முதலீடுகள் காரணமாக டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது.  இதற்கு முன்னதாக 2025 டிசம்பர் 16 அன்று ரூபாயின் மதிப்பு 91.14 என்ற அளவில் வீழ்ந்திருந்தது.  இந்த மாதத்தில் மட்டும் ரூபாயின் மதிப்பு இதுவரை 1.50 சதவிகிதம் வரை சரிந்துள்ளதாக அந்நியச் செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.  கிரீன்லாந்து விவகாரம் தொடர்பாக ஐரோப்பாவில் ஏற்பட்டுள்ள பதற்றம், புதிய சுங்கவரிகள் விதிக்கப்படலாம் என்ற அச்சம், இந்தியப் பங்குச்சந்தையில் நிலவும் இறங்குமுகம் ஆகியவை முதலீட்டாளர்கள்  நம்பிக்கை இழக்க காரணமாக உள்ளது.  இது குறித்து கோடக் மஹிந்திரா ஏஎம்சி நிறுவனத்தின் நிலையான வரு மானப் பிரிவுத் தலைவர் அபிஷேக் பி சென் கூறுகையில், இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகள் மூலதன வெளி யேற்றத்தால் பெரும் அழுத்தத்தை எதிர்கொள்கின்றன.  கிரீன்லாந்து விவகாரத்தால் அமெரிக்கா - ஐரோப்பா உறவில் ஏற் பட்டுள்ள விரிசல் மற்றும் வெனிசுலா வின் எண்ணெய் வளங்கள் மீதான அமெரிக்காவின் நடவடிக்கைகள்  உலக வர்த்தகத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தி யுள்ளன  என்று தெரிவித்துள்ளார்.