tamilnadu

img

நுகர்வோர் விழிப்புணர்வு பிரச்சார இயக்கம்

நுகர்வோர் விழிப்புணர்வு பிரச்சார இயக்கம்

இராஜபாளையம், ஜன.21- அகில இந்திய நுகர்வோர் கூட்டமைப்பு சார்பில் நுகர்வோர் விழிப்புணர்வு பிரச்சார இயக்கம் இந்தியா  முழுவதும் அகில இந்திய நுகர்வோர் அமைப்பின் தலைவர் டாக்டர் ஆனந்த் சர்மா தலைமையில் நடை பெற்று வருகிறது. தென்காசி மாவட்டத்திலிருந்து வருகை தந்த  பிரச்சார இயக்க விழிப்புணர்வு ரதத்திற்கு இராஜ பாளையம் புதுப்பாளையம் மாரியம்மன் கோவில் முன்பாக மாலை அணிவித்து மரியாதை செய்யப் பட்டது. நுகர்வோர் மன்ற பொதுச் செயலாளர் மனோ கரன் சாமுவேல் தலைமையில் தலைவர் மாரிமுத்து, செயலாளர் லட்சுமண சாமி, பொருளாளர் ராஜேந்தி ரன் மற்றும் தர்ம கிருஷ்ணராஜா உள்பட பலர் மாலை  அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் இராஜபாளையம் ரவுண்டானா காந்தி சிலை வந்தடைந்தது. அங்கு ராம்கோ பொறியியல் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு மேளதாளத்துடன் வரவேற்றனர். பின்னர் அங்குள்ள காந்தி சிலைக்கும், முன்னாள் சென்னை மாகாண முதல்வர் பி.எஸ்.குமாரசாமி ராஜா  சிலைக்கும் அகில இந்திய நுகர்வோர் அமைப்பின் தலைவர் டாக்டர் ஆனந்த் சர்மா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  தேசிய செயலாளர் செல்வராஜ், தேசிய பொதுச்  செயலாளர் திருநாவுக்கரசர்,  மாவட்ட தலைவர் ரவிக்குமார், மண்டல செயலாளர் வினோத்குமார் மற்றும் மகளிர் அமைப்புகள் மற்றும் பலர் இதில் கலந்து கொண்டனர்.