tamilnadu

தூத்துக்குடி மாநகரில் விடுபட்ட சாலைப் பணிகள் விரைவில் துவங்கும்  மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்

தூத்துக்குடி மாநகரில் விடுபட்ட சாலைப் பணிகள் விரைவில் துவங்கும்  மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்

தூத்துக்குடி, ஜன.21-  தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவல கத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. முகாமில் மேயர் ஜெகன் பெரியசாமி பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் அவர் பேசுகையில், தூத்துக்குடி மாநகர் பகுதிகளில் விடுபட்ட சாலை பணிகள் விரைவில் துவங்கும். போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் நடைபாதைகள் அமைக்கப்படும். ரோச் பூங்கா சீரமைக்கப்படும் என்று தெரிவித்தார். முகாமில் பெறப்பட்ட மனுக்களின் மீது தீர்வுகள் காணப் பட்டவர்களுக்கு அதற்கான ஆணைகளை மேயர் வழங்கி னார். இதில், மாநகராட்சி ஆணையர் பிரியங்கா, துணை மேயர் ஜெனிட்டா மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.